Headlines

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (14) குருநாகலில் இடம்பெற்றது. குருநாகல் மாநகர சபையின் முதன்மை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் எம்.எம்.அமீன் மற்றும்  பட்டியல் வேட்பாளர் இக்பால் ஷரீப்தீன் உட்பட குருநாகல் மாநகர எல்லையில் போட்டியிடும் சக வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More

வவுனியா சூடுவெந்தபுலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா சூடுவெந்தபுலவு, பாவற்குளம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக  நேற்று மாலை (13) சூடுவெந்தபுலவு, பழைய குடிமனையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தக்  கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மத் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.    

Read More

இறக்காமத்தில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை  கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும். கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண…

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வீட்டுக்கு வீடு தேர்தல்  பிர இக்றஃ வட்டாரத்தின் வேட்பாளர் வை.பி.எம். மஹ்தூமினின் தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினரரும், வேட்பாளருமான மனாப் மற்றும் சக வேட்பாளர்களான றியாஸ், தீனுல்லாஹ், றபீக் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸதர்களும் கலந்துகொண்டனர்.    

Read More

விருதோடை வட்டார வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில், விருதோடை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ.எம்.ஆசிக் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். வேட்பாளர் ஆசிக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் கட்பிட்டி பிரதேச சபை அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, தொழிலதிபர் நயீம் மற்றும் பலர்…

Read More

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  மாபெரும் மக்கள் பேரணியோடு தேர்தல் பிரசார   பொதுக்கூட்டம்  அண்மையில் புத்தளத்தில்  வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான அலி சப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைப்பாளருமான  ஆப்தீன் எஹியா மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.    

Read More

“தேர்தல் காலத்தில் பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்” அன்சில்!

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக முன்னாள் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குற்றம் சாட்டினார்.தேர்தல் காலத்தின் போது, மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதாக கட்சிகளிடம் பணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டமையினால்தான், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் இப்போது சமூகத்துக்கான பேரம் பேசலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அன்சில்…

Read More

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீது நாட்டம் கொண்டதல்ல வாக்குப்பலத்திலேயே நம்பிக்கைகொண்டிருக்கின்றது” தர்காநகரில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹஷீப் மரிக்கார் தலைமையில், தர்கா நகரில் நேற்று மாலை (12)…

Read More

“சின்னங்களையும், நிறங்களையும் மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம் மலையேறி வருகிறது” புதுக்கடையில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- கட்சி சின்னங்களையும், அவர்களின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கொழும்பு புதுக்கடையில் நேற்று மாலை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்…

Read More

மக்கள் காங்கிரஸின் நாகவில்லு பொதுக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ரிஜாஜ் அவர்களை ஆதரித்து அண்மையில் நாகவில்லு பிரதேசத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகியா நவவி மற்றும் கற்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஆப்தீன் எஹியா உட்பட மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.        

Read More

மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரத்தின் சென்னல் கிராமம்  01 இல் பி.எம்.எம்.ரியாலின் ஏற்பாட்டில் நேற்று மாலை (11) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களான சஹில், றசீட், யாஸ்தீன் ஆகியோர் உட்பட பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.      

Read More

“குருநாகல் நகரசபைத் தேர்தலில் அஸார்தீனின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஸார்தீன் மொய்னுதீனின் வெற்றியானது குருநாகல் வாழ் சமூகத்தின் வெற்றியாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார். அஸார்தீன் குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அறிமுகப்படுத்திய ஆரம்பகால உறுப்பினராக இருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளராகவும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகராகவும் இருப்பதுடன், மக்களுக்கான பல சேவைகளை…

Read More