Headlines

நான் வீட்டுக்கு தீ வைக்கவில்லை! மறுக்கும் இலங்கை பணிப் பெண்

பஹ்ரைனில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர், தான் பணி புரிந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லு முன், வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 48 வயதான குறித்த இலங்கை பணிப்பெண் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, தனது அறையில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த பணிப் பெண்…

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் விரைவில்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கைநூல் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. புதிய பாடநெறிகள் மற்றும் ஏனைய பாடநெறிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த கைநூல் விநியோகிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பீ.ஏச்.எம் குணரத்ன கூறியுள்ளார்

Read More

ரோஹித்த அபேகுணவர்தனவும் நீக்கப்பட்டார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கான கடிதம் தனக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தம்மை விலக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான கடிதம் ஜனாதிபதியின் கையெழுத்துடன் தமக்கு கிடைக்க பெற்றதாக அவர் எமக்கு தெரிவித்திருந்தார். கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு…

Read More

இராணுவத்தினருக்கான பொது மன்னிப்புக் காலம் 25ஆம் திகதி வரை நீடிப்பு

இராணுவத்தில் இருந்து தப்பியோடிய இராணுவத்தினரை சட்ட ரீதியாக விலக அவகாசம் வழங்கும் பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இக்25ம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டரீதியாக விலகும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமது படையணிக்கு அறிவிக்காமல் விடுமுறையில் இருப்பவர்கள் உடனடியாக ஆஜர் ஆகவும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல்…

Read More

தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சர் றிஷாத் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் – அஸ்கர் ரூமி

பாறுக் சிகான் அமைச்சர் றிஷாத் மீது அபாண்டமாக குற்றம் சாட்டும் தரப்பு தங்களை பிரபல்யப்படுத்தும் வங்குரோத்து செயற்பாட்டில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் ரூமி குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது பல தரப்பால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது தொடர்பாக செய்திகள் தெரிவிக்கின்றனவே என கேட்டவேளை இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது கருத்தில் அமைச்சர் இன்று ஒரு தேசிய தலைவனாக மக்கள் மத்தியில் திகழ்கின்றார்.இவரை வீழ்த்த பலரும் நினைக்கின்றனர்.இது குறித்து பகல்…

Read More

பதவிகளையும்,பட்டங்களையும் கொடுப்பது அல்லாஹ் என்பதை மறந்து செயற்பட முடியாது – றிஷாத் பதியுதீன்

ஒரு சமூகத்தின் விடுதலைக்காக வருகின்ற சவால்களை எதிர் கொண்டு அந்த சமூகத்தை பாதுகாக்கவே எமக்கு அரசியல் என்கின்ற கவசமே ஒழிய இந்த அரசியலை வைத்து எவரும் தனிப்பட்ட லாபங்களை அடைவதற்கு முயற்சித்தால் அது மக்களினால் தோற்கடிக்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் வவுனியா…

Read More

19 ஆவது திருத்தத்திற்கு எதிராக மஹிந்த சதி : கபீர் ஹாசிம்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா?இல்லையா? என்பதை உறுதியாகக் கூறமுடியாது.ஆனால் 19 ஆவது திருத்தத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். இது தொடர்பாக கபீர் ஹாசிம் எம்.பி மேலும் தெளிவு படுத்துகையில்,100 நாட்களுக்குள் 19 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலை…

Read More

மிஹின் லங்காவின் புதிய விமானசேவைகள் ஜூன் மாதம் ஆரம்பம்

மிஹின்லங்கா விமானசேவை  கொழும்பு தொடக்கம் கல்கத்தா வரையான தனது புதிய சேவையை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இப்புதிய சேவையினூடாக A319 அல்லது A321விமானம் வாராத்துக்கு மூன்று தடவைகள் பயணிக்கவுள்ளது.ஜூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து மேலும் பல விமானசேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கொழும்பு- மதுரை மற்றும் கொழும்பு- டாக்கா விமானசேவை வாரத்துக்கு 6-7 தடவைகளாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.கொழும்ப- லாகூர் விமானசேவை ஜூன் 18 முதல் வாராந்துக்கு 3-5 தடவையும் கொழும்பு- சார்ஜா சேவை ஜூன் 19ஆம் திகதி…

Read More

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை  862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன்  488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிதி மோசடியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் – என்.கே இளங்ககோன்

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்தார். கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மாஅதிபர் கூறினார். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் என்.கே இளங்ககோன் கூறினார்.

Read More