Main News
மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன? இறக்காமத்தில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!
-ஊடகப்பிரிவு- முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆக்ரோஷமாக கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, இறக்காமம் சந்தைச் சதுக்கத்தில் நேற்று மாலை (20) நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்….
நாவிதன் வெளி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேகு, ஹஸனலி!
-ஊடகப்பிரிவு- நாவிதன் வெளி பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் சென்றல் கேம்ப் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை (20) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களான முன்னாள் ஸ்தாபகத் தவிசாளர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி ஆகியோரும் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்…
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மருதமுனை தேர்தல் பிரசாரக்கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில், கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) மருதமுனையில் இடம்பெற்றக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி மற்றும்…
ஹக்கீமுக்கு சவால் விட்ட பிரதியமைச்சர் அமீர் அலி!
-எஸ்.எம்.எம்.முர்ஷித்- கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு முடியும் என்று சொன்னால் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்திற்கு வர முடியுமா? அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில் அண்மையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றதில் கலந்து…
முசலிப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அணியில் சேர்வோம்! வேட்பாளர் முகுசீன் றைசுதீன்!
-ஊடகப்பிரிவு- யுத்தம் முடிந்து மீள்குடியேறி வரும் எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சரியான தலைமையாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருக்கிறார். எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பல கோடிகள் ஒதுக்கப்படுகிறது. அதனைக்கொண்டு வேலைத்திட்டங்களை செய்வதற்கு எங்கள் கட்சிக்கு ஆதரவு தேவைப்படுகிறது. இரண்டு வருடங்களுக்குள் எமது பிரதேசத்தின் வீட்டுப்பிரச்சினை, நீர்ப்பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை அதேபோல் இன்னும் இதர பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு பலமான அணி பிரதேசத்தில் தேவைப்படுகிறது. அந்த பலமான அணியை தீர்மானிக்கும் பொறுப்பு எமது பிரதேச…
‘இறக்காமம் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறுவது வெட்கக்கேடானது’ பொத்துவில்லில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,…
கல்முனையில் மகளிருக்கான கூட்டம்!
-ஊடகப்பிரிவு- கல்முனை மாநகரசபைக்குட்பட்ட மகளிர்களுக்கான பொதுக்கூட்டம் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமாகிய கலீலுா் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டாா். அவர் உரையாற்றுகையில் எங்களது முதல் அபிவிருத்தியாக கல்முனை மாநகருக்கு ஓா் மணிக்கூட்டு கோபுரமும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு முன்னால் ஓா் மேம்பாலத்தையும் அமைப்போம். கடந்த ஆட்சியாளர்களால் முடக்கப்பட்ட அபிவிருத்திகளை நாங்கள் அடைவதற்கு இம்முறை…
‘குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க நான் தயார், விவாதத்திற்கு அழைக்கின்றார்’ அன்ஸில்!
-சப்னி அஹமட்- போலியான குற்றச்சாட்டுக்களை நான் கூறுகின்றேன் என மேடைகளில் கூறித்திரியும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கட்சிசார்ந்த எவராக இருந்தாலும் முடிந்தால் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ அன்ஸில் சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக பாலமுனையில் நடைபெற்ற மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற போதே, இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், கடந்த காலங்களில் நான் பல மேடைகளில்…
‘வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாற வேண்டும்’ டாக்டர் ஹஸ்மியா!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சியும் அதன் எதிர்கால வெற்றியும் வடக்கில் மாத்திரமின்றி கிழக்கின் எல்லாப் பிரதேசங்களிலும் உறுதியாகி விட்டன. அந்த வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாறிக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்புக்களுக்கான கூட்டங்கள் கல்முனை, மாவடிப்பள்ளி, இறக்காமம், மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்றன. இறுதியாக கல்முனை மகளிர்களுக்கான கூட்டத்தில் கலந்து…
‘அம்பாறையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது காலத்தின் தேவை’ ஏ.எம்.ஜெமீல் தெரிவிப்பு!
-அமீன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம் அண்மையில் வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதித்தலைவர் ஜெமீல் கூறியதாவது, நாம் இக்கட்டான ஒரு அரசியல் சூழ்நிலையில் வாழ்கின்றோம்….
‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’ முசலி வேப்பங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- வடக்கில், முசலியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில் அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு, வேப்பங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் பைரூஸின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், வேட்பாளர் அறிமுகக் கூட்டமும்…
“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” அமைச்சர் ரிஷாட்!
–ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற கனவிலும், மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை தட்டிக்கொள்ளலாம் என்ற நப்பாசையிலும் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கொந்தராத்துக்காக செயற்படுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலி பிரதேச சபைத் தேர்தலில், சிலாவத்துறை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள்…
