Headlines

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

-ஊடகப்பிரிவு-  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் நோக்கி திரளும் மக்கள் கூட்டம் கடந்த காலங்களில் சமூகத்தை வழிநடத்துவதாகக் கூறிக் கொண்டு தேர்தல் காலங்களில் பணப்பெட்டிகளை பெருந்தேசியக் கட்சிகளிடமிருந்து கைமாற்றும் மோசடிக்காரர்கள் இனியும் எங்களுக்கு வேண்டாம் என்று கோஷமிடத் தொடங்கிவிட்டனர் என்று முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும்,  அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில்…

Read More

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்!

–சுஐப் எம்.காசிம்- முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவர் தூற்றிவருவதானது வெட்கக்கேடான விடயம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலிப் பிரதேச சபை தேர்தலில் மறிச்சுக்கட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியானை ஆதரித்து மறிச்சுக்கட்டியில்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க கொட்டராமுல்ல உபதபால் நிலையத்தினை நவீனமயப்படுத்த முடிவு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் கொட்டராமுல்லயில் அமைந்துள்ள  உபதபால் நிலையத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக மாற்றித்தர நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனினால்,  முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். நீண்டகாலமாக உபதபாலகமாக இயங்கிவரும் இந்த தபாலகத்தினை, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்துவதாலும்,குளியாப்பிட்டிய கொழும்பு பிரதான வீதியில் இந்த உபதபாலகம் அமைந்திருப்பதால், இதனை தபாலகமாக  தரமுயர்த்துவதன் அவசியம்…

Read More

கரடிக்குளி வட்டார தேர்தல் காரியாலய திறப்புவிழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் முசலி பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் கரடிக்குளி, கொண்டச்சி வட்டார வேட்பாளர் சுபியான் ஆசிரியரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா நாளை (17/ 01/ 2018) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். விஷேட அதிதியாக  வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் மற்றும் முசலி பிரதேச சபைத்…

Read More

“சிறுபான்மை சமூகம் தன்னுடைய மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு உகந்த தேர்தல்” ஹிஷாம் சுஹைல் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அண்மைக் காலங்களில் எமது சமூகத்தை கறிவேப்பிலையாகவே பயன்படுத்துகின்றனர். தேவை ஏற்படின், தேர்தல் காலங்களில் எமது பிரதேசத்துக்கு வந்து எமது வாக்குகளை அள்ளிக்கொண்டு செல்வார்கள். எமக்கு ஒரு பிரச்சினையென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களுத்துறை நகரசபைக்கு போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற…

Read More

பொத்துவில் கிரான் கோமாரி காணி உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு.. அமைச்சர்  ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!

-முர்ஷிட் முஹம்மத்- பொத்துவில் கிரான் கோமாரி காணி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட குடும்பங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் இணைப்பாளர் டாக்டர். பரீட் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டதோடு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்தனர். அம்பாறை கோமாரியில் தமக்கு சொந்தமான…

Read More

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டம்.. டாக்டர்.ஹஸ்மியா பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, இறக்காமம், மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் கடந்த சனிக்கிழமை (13) அன்று  இடம்பெற்றன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டார். சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட் ஆகியோர் உட்பட…

Read More

“அவதூறுகளினாலும், அபாண்டங்களினாலும் மக்கள் காங்கிரஸின் எழுச்சியை மட்டுப்படுத்திவிட முடியாது” களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தலைமையில், களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற தேர்தல்…

Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்….

–தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா– வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள்  வரலாற்றில் அழிக்க முடியாததொன்றாகும். யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின்  பின்னரான துரித அபிவிருத்தி என்பன தொடர்பில் பார்க்கின்ற போது, அது அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரானதன் பின்னர்தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை என்பதை பகிரங்கமாக கூறியாக வேண்டும். வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக றிசாத் பதியுதீன் தெரிவானது முதல்,…

Read More

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நசீர் தெரிவித்தார். பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பஸ் அமால்தீனின் உருவப்படத்துடன் கட்டப்பட்டிருந்த உயரமான கட்டவுட்டை மையமாக வைத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும், மக்கள்…

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று (14) விசினவ, மடலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டதுடன், வேட்பாளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விளக்கங்களையும் அளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள்…

Read More

“எம்.சி.இர்பானின் வெற்றியை உறுதி செய்வோம்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெகுணுகொல்ல வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  எம்.சி.இர்பான் ஆசிரியரை ஆதரித்து  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூரியதாவது, கடந்த காலங்களில்  இவர் அபிவிருத்தி மற்றும் சமூக பணிகளில் கூடிய கவனம் செலுத்தி வருவதுடன், கெகுணுகொல்ல வட்டாரத்தில் மட்டுமன்றி சியம்பலாகஸ்கொடுவ,பொதுஹர போன்ற வட்டாரங்களிலும் சகோதரர் இர்பான் பல சேவைகளை செய்துள்ளார். மேலும், பிரதேசத்தின் பல…

Read More