Main News
மடலஸ்ஸ இளைஞர்களுடனான கலந்துரையாடல்!
-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெக்குனுகொல்ல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைப்பாளருமான எம்.சி.இர்பானின் ஏற்பாட்டில் மடலஸ்ஸ இளைஞர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது . இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருசில அரசியல்வாதிகள் தமது இலாபத்திற்காக எமது பிரதேசங்களை கூறுபோட சதி செய்கின்றனர்! சுபிஹான் அப்துல் கபூர்
-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் அப்துல் கபூர் மாஸ்டர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது, எனக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவு தேர்தல் காலத்தில் மட்டும் மலர்வது அல்ல. அதையும் தாண்டி இரத்தத்தால்,பாசப்பிணைப்பால் அன்று முதல் இன்று வரை என்றுமே வேற்றுமைப்படுத்த முடியாத உறவு. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எமது வட்டாரத்திற்கு செய்த, செய்து வருகின்ற, செய்யவிருக்கின்ற…
‘தேயிலை தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும்’ ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- இலங்கை தேயிலையை நாம் தடைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால், இது எங்கள் அஸ்பெஸ்டஸ் ஏற்றுமதிக்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலைத் தொகுதியில் காணப்பட்ட ஒரு பூச்சியினாலேயே இந்த சிறிய விவகாரம் ஏற்பட்டது என ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டீரிட்டி தெரிவித்தார். நேற்று முன்தினம் (09) கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே தூதுவர் யூரி…
“உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்” காத்தான்குடியில் ரீ.எல்.ஜவ்பர்கான்!
-ஊடகப்பிரிவு- மர்ஹூம் அஷ்ரபின் குணாம்சங்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் தாங்கள் காண்பதாக காத்தான்குடி நகரசபையின் மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார். காத்தன்குடி மக்களின் அரசியலையும், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால வளர்ச்சியில் காத்தன்குடியே மையப்புள்ளியாக இருந்தது என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் அரசியலை மேற்கொண்டவர்களில், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் நானும் இராஜாங்க…
ஓட்டமாவடியில் இடம்பெற்ற வேட்பாளர் ஆதரவு கூட்டம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்ணனியின் யானை சின்னத்தில் கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோரளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் நேற்று முந்தினம் (07) ஒட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் விசேட அதிதியாக ஐக்கி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹஸன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர். …
மக்கள் காங்கிரஸின் மூதூர் பொதுக்கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இன்று (08) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றினார். கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதியமைச்சர் அமீர் அலி, இஷாக் ரஹ்மான் எம்.பி, பிரதித் தலைவர் ஜமீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத்,…
‘தலைமைப்பதவி எமக்கொரு பொருட்டல்ல’ நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- நாம் தலைமைப் பதவிக்கு என்றும் ஆசைப்பட்டவர்களல்லர். எமக்கு கட்சி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் எமக்கு தேவையானது சமூகத்தின் நலனை மையப்படுத்திய விடயங்களே. நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைமையினை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலிக்கு வழங்கியதிலிருந்து நாம் சமூகத்திற்கு நல்லதொரு செய்தியினை சொல்லியிருக்கின்றோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத்…
‘பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ பசீர் சேகுதாவூத் அழைப்பு!
ரஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால், மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ரஊப் ஹக்கீமை எல்லா இடங்களிலும் தோற்கடித்து, அதன் மூலம் ஹக்கீமிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் மு.காங்கிரசை மீட்டெடுப்பதுதான் தங்களின் கடமை எனவும் அவர் கூறினார். நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று…
மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான கலந்துரையாடல்!
-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரம், புளக் ஜே மேற்க்கு 02ம் கிராம சேவை பிரிவில், ஸ்டார் லைப் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பவுண்டேஷன் தலைவர் எம்.எம்.ரபீக் தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் உட்பட ஏனைய வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘கல்முனை முதல்வர் பதவியை என்னிடமிருந்து மு.காவினர் பறித்தெடுத்தனர்’ சிராஸ் மீராசாஹிப்!
-எஸ்.அஷ்ரப்கான்- மக்களால் தெரிவுசெய்யப்பட்டு கல்முனை முதல்வரான என்னிடமிருந்த பதவியை 2 வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸினர் பறித்தெடுத்தார்கள் என முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கவலை தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வட்டாரம் 17ல் போட்டியிடும் எம்.ஐ.எம்.அப்துல் மனாபினை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிராஸ்…
‘அம்பாறை மாவட்டத்தில் 17 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் கொடுத்த ஆணையை நிராகரித்துள்ளனர்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
பதினேழு வருடங்களாக பாராளுமன்றத் தேர்தலிலே, மாகாண சபைத் தேர்தலிலே மாநகர சபைத் தேர்தலிலே வாக்களித்த மக்கள் அந்தந்தக் காலகட்டத்திலே அபிவிருத்தி பற்றி மேடைகளிலேயே கேட்டிருந்தால், இப்போது தேவைப்படுகின்ற அபிவிருத்தியை எங்களிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு) கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.நெய்னா…
மருதமுனை கண்டுகொண்ட வரலாறு காணாத அரசியல் தளம்!
-ஊடகப்பிரிவு- கல்முனை கிழக்கில் அரசியல் வரலலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள், இன்று (06) மருதமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது, மேடையில் ஏறி கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மருதமுனை கிராம மக்களின் பல்வேறு தேவைகள் தொடர்பில் கண்டறிந்து, அவற்றை இந்த மக்களுக்காக பெற்றுக்கொடுத்ததுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பினை பெரும்பான்மை…
