Headlines

மண் மேடு சரிந்து விழுந்ததில் மாணவன் பலி : நாவலப்பிட்டியில் ​சம்பவம்

– க.கிஷாந்தன் –  நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி பயிலும் 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத…

Read More

கொடதெனியாவ கொலை; சிறுமியின் தந்தை மீது வழக்கு

கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் தந்தையான உப்புல் சாந்த மீதும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நீர்கொழும்பில் பிரபல பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்தவரென தெரிவிக்கப்படுகின்றது. அவர் மீதும் அவருக்கு உதவியாக இருந்த இன்னொரு ஆசிரியருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் துஷ்பிரயோக வழக்கொன்றும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் …

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More

கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது

கம்பஹா – உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலம் மீட்கப்பட்டதுடன் சிறுமியின் சடலம் வீட்டிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பசியாலை பிரதேசத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர். பொலிஸார்…

Read More

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மின்வெட்டு

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிம​னை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மின் கம்பி கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாவி தொடக்கம் கற்பிட்டிக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது ….

Read More

களுத்துறையில் நீர்வெட்டு

களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டானது வாதுவ, களுத்துறை, பயாகல, அளுத்கம, பேருவளை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யானை தாக்கி ஊடகவியலாளர் பலி

மின்னேரியா – சமகிபுர  பகுதியில் காட்டுயானை தாக்கி ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சமகிபுர பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து  அட்டகாசம் செய்தமையை ஒளிப்பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பிரியந்த ரத்நாயக்க என்ற 34 வயதுடைய  ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளார்.

Read More

24 மணி நேரத்தில் விபத்­துக்­களில் ஏழு பேர் உயி­ரி­ழப்பு; 26 பேருக்கு காயம்

நாட­ளா­விய ரீதியில் நேற்று நண்­பகல் 12.00 மணி­யுடன் நிறை­வுக்கு வந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களில் 7 பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். தம்­புள்ளை, நாரம்­மல, பன்­னல, ஹுங்­கம, கிரி­உல்ல மற்றும் புளத் சிங்­கள ஆகிய பகு­தி­க­ளி­லேயே இந்த விபத்துச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரிவித்துள்ளது. நேற்று அதி­காலை தம்­புள்ளை பொலிஸ் பிரிவின், தம்­புள்ளை – கெக்­கி­ராவை பிர­தான வீதியின் மிரிஸ்­கோ­ணி­யாவ சந்­தியில் தனியார் பஸ் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் அதில்…

Read More

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று  ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதோடு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும்…

Read More

வயது 14 சிறுமியைக் காணவில்லை

– அப்துல்லாஹ் – வீட்டிலிருந்த 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென அவளது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா ஷிரோமினா (வயது 14) என்ற சிறுமியே செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர் முறையிட்டுள்ளனர். சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளார். தொழிலுக்காகச் சென்ற பெற்றோர் வீடு திரும்பிய போது சிறுமி வீட்டிலிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து…

Read More

வைத்திய மாணவர் 11 பேருக்கு நோட்டீஸ்

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை  ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையிலும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் வைத்திய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயே நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஒன்றுதிரட்டி மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் நீதிமன்றத்துக்கு…

Read More

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு 3,40,926 மாண­வர்கள்

2015 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள்   தோற்­ற­வுள்­ளனர். பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் பரீட்சை எதிர்­வரும் 23 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. தரம் 5 புல­மைப்­ப­ரிசில் ­ப­ரீட்சை 2 ஆயிரத்து 907 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெறவுள்ளது. பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களில் 2 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 373 மாண­வர்கள் சிங்­கள மொழி…

Read More