Headlines

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்




5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

download (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *