Headlines

மன்சூர் சஹ்னாஸ்  அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் முதல் இடம்

– கே.அஸீம் முஹம்மத் – அனுராதபுர மாவட்ட கெக்கிராவ கல்வி வலையத்தின் ஹோறாபொல முஸ்ஸீம் வித்தியாலய மாணவி மன்சூர் சஹ்னாஸ்  அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில்  எழுத்தாக்கம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்

Read More

‘பொதுமக்கள் உதவியை நாடுகின்றார்’

‘ ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருப்பான் ‘ (ஹதீஸ்) மும்மது நிஸாம்தீன் ( வயது 42) இரண்டு பிள்ளைகளின் தந்தை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர் மின் உபகரணங்களைத் திருத்தும் தொழில் புரிபவர். இவரின் மூத்த பிள்ளை பாத்திமா ரீனா மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 8 ஆம் வகுப்பிலும் இரண்டாம் பிள்ளை பாத்திமா ராசிதா இரண்டாம் வகுப்பிலும் கல்வி பயிழ்கின்றனர். அண்மையில் இவரிற்கு ஏற்பட்ட திடீர்…

Read More

வத்தளை, மபோலையில் முஸ்லிமொருவர் வெட்டிக் கொலை

வத்தளை, மபோலை நகரிலுள்ள இறைச்சிக்கடை ஒன்றின் உரிமையாளரான அரபாத் எனும் முஸ்லிம் நபர் அடையாளம் தெரியாத குழுவினரால் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகனுடன் பள்ளிவாசலுக்கு சென்று முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையிலே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்ததாக கூறப்படும் சிலர் குறித்த வர்த்தகரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை…

Read More

கரையோரப் பிரேதசங்களில் கடும் சூறாவளி

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக இப்பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. நேற்று மாலை  வீசிய மினி சூறாவளி சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தது. பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்கிளிலுள்ள வீடுகளின் கூரைகள் மின் கம்பங்கள் என்பன சேதமானதுடன் மின்கம்பிகள் சில அறுந்து வீழ்ந்து சில மணிநேரம் இப்பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது. அட்டாளைச்சேனை…

Read More

அம்பாறை மாவட்டத்தில் மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதம்

– பைஷல் இஸ்மாயில் – அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (03) சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது. அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டு காணப்படுகின்றது.

Read More

நவ்ஷாத் ஹாஜியிடமிருந்து ஒரு செய்தி

– ஊடகப் பிரிவு – 1997 ஆம் ஆண்திலிருந்து வத்தளை நகரசபை உப தலைவராகவும், 2011 ஆம் ஆண்திலிருந்து வத்தளை நகர சபை தேர்தலில் மக்களின் அதிகபடியான வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டு நகரசபை தலைவராக நியமிக்கப் பட்ட நான் இன்று உங்களுக்காக ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான UPFA வில் இன்று காலடி எடுத்து வைத்துள்ள எனக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் எந்த இன, மத மற்றும் மொழி பாகுபாடின்றி…

Read More

பயணப் பையில் சடலம் மீட்பு!

கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை அண்மித்த பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய அதுல்கோட்டை, உடஹாமுல்ல, மிரிஹான, நுகேகொடை, பாகொடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணித்தொடக்கம் இரவு 7 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

குருநாகல் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முஸ்லிம்கள் வபாத்.

இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் குருநாகலில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அனுராதபுரம், அசாரிகம பிரதேசத்தை  சேர்ந்த வாஹித் மவ்லவி, ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஜீப் ஒன்றுடன் மோதிய  போதே மேற்படி அசம்பாவிதம் இடம் பெற்றது எனவும், உயிரிழந்தவர்களில் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் மற்றவர் ஒரு பிள்ளையின்…

Read More

பதுளையில் முஸ்லிம் வியாபாரி வெட்டிக்கொலை

பதுளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் முஹமட் ரொசான்  என்பவர் (வயது – 45) கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நகரில் வீதி வியாபரத்தில் ஈடுபடும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இக் கொலை தொடர்பில் பொலிசார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More

பாடசாலை ஆதிபருக்கு விளக்கமறியல்!

கண்டி – கன்னொறுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற அதிபரையும் ஆசிரியரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 51 வயதுடைய அதிபரும் 42 வயதுடைய ஆசிரியருமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

Read More

அதிகாலை வீதி விபத்தில் கார் சுக்குநூறாகியது!

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் -கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதி மருங்கில் இருந்த மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதுண்டு சுக்குநூறாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் தனது மகனைப் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று சொந்த ஊரான பொத்துவிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த…

Read More