Headlines

களுத்துறையில் நீர்வெட்டு




களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டானது வாதுவ, களுத்துறை, பயாகல, அளுத்கம, பேருவளை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.

களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *