Headlines

மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகையிடுமாறு முதலமைச்சர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறித்த இடத்தை முற்றுகையிட்ட மேல் மாகாண கல்வித்  திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரான பாடசாலை அதிபரையும் பெண்ணையும் தமது பொறுப்பில் எடுத்து, அவர்களை ஹொரணை வலய கல்வி அலுவலகத்திற்கு…

Read More

புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் தாயாா் வபாத்

– அஸ்ரப் ஏ சமத் – புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் அன்புத் தாயாா் ஜனாபா ஹவ்வா பாய் ஓமா் நேற்று இரவு வபாத்தானார். மர்ஹூம்களான ஜவ்பர் உமர், அலி உமர், ஹாஜி சித்தீக் உமர், மர்ஹூமா கலீமா பாய், அமீனா பாய் சுரியா ஆகியோரின் தாயாரும் ஹாஜி சுலைமான், உமர் சுரியா, இர்ஷாட் முஹமட், தன்வீர் சித்தீக் ஆகியோரின் பாட்டியும் ஆவார் இவரின் ஜனாஸா தற்போது இலக்கம் 94, ஸ்டேஸ் றோட், கிரேண்பாஸ், கொழும்பு-14 எனும் இலக்கத்தில்…

Read More

சீரற்ற காலநிலை : வாகன சாரதிகள் அவதானம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்  பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். வாகனத்தில்  முன் விளக்கு ஒளிரவிட்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய  களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மதவாச்சியில் பஸ் விபத்து : 5 பேர் படுகாயம்

மதவாச்சி – நாவற்குளம் பிரதேசத்தில் இரண்டு பஸ் வண்டிகள் இன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மற்றும் விமானப் படையினரின் பஸ் வண்டி என்பன வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் இடம்கொடுக்கும் போது, மழை காலநிலை காரணமாக, குறித்த வீதி வழுக்கியதில் இந்த இரண்டு பஸ்களும் வீதியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது…

Read More

12 ஆம் திகதி புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார். இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றதுடன் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை அதிபர் சேவை தரம்-111 க்கான போட்டிப் பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை

– முஹம்மட் புஹாரி – இலங்கை அதிபர் சேவை தரம்-111 க்கான போட்டிப் பரீட்சை எதிர் வரும் 10ம் திகதி நடை பெற இருக்கின்றது.இவ் பரீசைக்கு தோற்று கின்ற ஆசிரியர்களில் அதிகமானவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளமையினால் அவ் பரீட்சையை தற்காலிகமாக இடை நிறுத்தி பிரிதொரு தினத்தில் நடாத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை இணைச் செயலாளர் ஏ.எம்.றஹீம் அவசர தந்தி ஒன்றினை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு…

Read More

அவசர உதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவருடைய சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை அல்லாஹ்வின் துணையால் வெற்றிகரமாக செய்து முடிக்க சுமார் ரூபா. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படுவதனால் அதனை அவரது குடும்பத்தினரால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. ஆதலால் அன்பர்கள், நண்பர்கள்,…

Read More

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்ற போதே இவரை யானை தாக்கியுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கம்பஹாவில் மேலும் ஒரு அதிர்ச்சி: 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்: பாட்டன், மாமா கைது

கம்பஹா, கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற ஐந்து வயதுடைய சிறுமி, கொடூ­ர­மாக பாலியல் துஷ்பிரயோகம் செய்­யப்­பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கம்பஹா, கனேமுல்ல பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் சிறுமியின் பாட்டன், மாமா மற்றும் இளைஞன் ஆகியோர் கனேமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை…

Read More

புலனாய்வு துறை அதிகாரி மரணம்

கம்பஹா, கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான செயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கடமைக்காக சென்றிருந்த பொலிஸ் விசேட பணியகத்தின் (புலனாய்வு பிரிவு) கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலி காரணமாகவே அவர், மரணமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய சடலம் திவுலுப்பிட்டிய ஹோரகஹமுல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு மொரவக்க, கொட்டபொல பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 72 மற்றும் 64 வயதுடைய இருவருக்கே  இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More