Headlines

பம்பலப்பிட்டி பெண் கொலை: இருவர் கைது

பம்பலபிட்டி சென்.பீட்டர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய 44 வயதான பெண் ஊழியரின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மேற்படி பாடசாலையின் காவலாளி எனவும் மற்றையவர் பாடசாலைக்கு வந்து செல்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். பாடசாலையின் களஞ்சிய அறையிலிந்து அந்த பெண்ணின் சடலம் ஏப்ரல் 19ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மண்மேடுகள் சரிந்து வீழ்வதற்கும், மண்சரிவுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக…

Read More

ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் சாதனை

றம்ஸீன் முஹம்மட் ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். கல்வியமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவு , ஸ்ரீலங்கா கணணி சம்மேளனம் , இலங்கை தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் ஆகியன கொழும்பு பல்கலைக்கழக கணணிப்பிரிவுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்திய தகவல் தொழில்நுட்பப்போட்டியில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் கே.எம்.எம்.அஸாம் ஹுசைன் ,…

Read More

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டு யுவதி அடுத்தவாரம் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக தெரிவித்தார். நீண்ட நாள் விடுமுறை காரணமாக ஜனாதிபதியின் விடுதலைக்கான கடிதம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அனுப்ப தாமதமாகியதனாலேயே விடுதலை தாமதமானதென்றும் அவர் தெரிவித்தார்.கடந்த பெப்ரவரி மாதம் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த யுவதி உதயசிறி சீகிரிய சிற்பங்களில் கிறுக்கியதால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…

Read More

சுற்றுலா சோகம்.. பாணந்துறயில் இருந்து மன்னார் சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற வாலிபர் ஆற்றில் முழ்கி வபாத்

பாணந்துறயில் இருந்து இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் மன்னாருக்கு சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற 18 வயது வாலிபர் ஆற்றில் மன்னார் முழ்கி வபாத் ஆகியுள்ளார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மன்னாருக்கு சுற்றுலா சென்ற வேளை அங்கு மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க இறங்கிய குறிப்பிட்ட இளைஞர் நீரில் அடிபட்டு சென்று வபாத் ஆகியதாக தெரிய வருகிறது.

Read More

இலங்கையின் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு அளப்பரியது

இலங்கையின் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு அளப்பரியது. – தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் முஹ்லிஸ் வஹாப்தீன் இலங்கையின் சிறிய, நடுத்தர அளவிலான கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல ஊக்குவிப்புகள், செயலமர்வுகள் கருத்தரங்குகள், கண்காட்சி மூலம் சிறு உற்பத்திகளுக்குரிய உலக சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல வேலைத்திட்டங்களை செயற்படுத்துகிறது. சந்தைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி…

Read More

இலங்கை ரயில்வே திட்டத்தை நவீனமயமாக்க நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்!

நாட்டின் கடுகதி ரயில் சேவை நெட்வேர்க் வலயத்தினை நவீனமயமாக்கும் பொருட்டு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து களனிப்பள்ளத்தாக்கு அவிசாவளை ஊடாக சபுகஸ்கந்த செல்லும் ரயில் பாதை மீளப்புனரமைக்கப்படவுள்ளது.  அத்துடன் கரையோரத்தில் காணப்படும் ரயில் வே தளங்கள் இரட்டை தளங்களாக விரிவாக்கி அமைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில் அளுத்கம வுக்கான ரயில் தளப்பாதையும், பொல்காவல குருநாகலுக்கு இடையிலான ரயில்வே தளங்களுமே விரிவாக்கி அமைக்கப்படவுள்ளன. அநுராதபுரத்திலிருந்து வவுனியா, மாகோ, திருகோணமலை…

Read More

இரண்டு கோடி ரூபா தங்க நகைகளை பனியனினுள் மறைத்து கடத்த எடுத்த முயற்சி முறியடிப்பு

எம்.ஐ.அப்துல் நஸார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை தமது பனியனினுள் வைத்து மறைத்து இந்தியாவின் சென்னை நகருக்கு கொண்டு செல்வதற்கு வந்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் நிறை 4.2 கிலோகிராமாகும். சந்தேக நபர்கள் ஜெட் விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.ஜீ.004 இலக்க விமானத்தில் இந்தியாவின் சென்னை நகருக்கு செல்வதற்கு வந்திருந்த…

Read More

விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறையில் சென்றவர்கள் மீண்டும்  திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு பயண முடிவிடங்களில் இருந்து கொழும்பிற்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்தார். இதேவேளை, விடுமுறையின் நிமித்தம் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ள மக்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை…

Read More

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 600 வாகனச் சாரதிகள் கைது

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 605 வாகனச் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவருட கொண்டாட்டங்களின் போது எது வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்கும் படி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 291 மோட்டார் வாகனச் சாரதிகளும், 240 ஓட்டோ வாகன சாரதிகளும், 24 கார் சாரதிகளும்,  20 லொறி சாரதிகளும்,08 வான் சாரதிகளும் உள்ளடங்குகின்றனர். அவற்றுள் 04 தனியார்…

Read More