Headlines

ஊடகவியலை மேம்படுத்த சுயாதீன ஆணைக்குழு!

ஊடகவியலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கான சம்பள திட்டங்கள், ஒழுக்க கோவைகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகார அட்டைகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார். நமது நாட்டு புகைப்பட கலைஞர்களுக்கான ஒழுக்க கோவையினை தயாரித்து அதனை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று(02) சனிக்கிழமை கொழும்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது….

Read More

இஸ்லாத்தை குழி தோண்டிப் புதைக்க தலைவர்களை குறிவைக்கும் ஷீஆக்கள்

இஸ்லாத்தில் சில முக்கியமான மனிதர்களை, தலைவர்களைக் குறிவைத்து இந்த ஷியாக்கள் பல சதித்திட்டங்களை மேற் கொண்டனர், கொள்கின்றனர். அந்தவகையில், முன்னால் ஈரான் ஜனாதிபதி சதாம் ஹூசையினையும் தூக்கிலிட்டது முக்ததா என்ற ஷியா நயவஞ்சகன்தான். சதாைமை காட்டிக் கொடுத்து தன் கையாளேயே தூக்கிளிட்டது  ஷியாக்கள்தான். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் என்றும் எதிரிகள் இந்த ஷியாக்கள். ஷியாக்கள்  இஸ்லாத்தை சீர் குழைத்து அதில் முக்கிய தூண்களாக விளங்கும் சில முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து அவரை வீழ்த்தினால் இந்த சமூகத்தையே வீழ்த்தலாம் என்று அக்கு வேறு ஆணிவேறாக அறிந்து…

Read More

அவசரகால மின்சார முகாமை ஆராய குழு நியமனம்

இலங்கையில் அவசர நிலைமைகளின் போது மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினால் அவசர நிலைமைகளின் போது தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறினார். அத்துடன் குறித்த அறிக்கையை இந்த மாத நிறைவிற்குள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் போது…

Read More

அரசாங்கத்திடம் மஹிந்த கோரிக்கை!

அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை, ஹூங்கம பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். தம்முடன் இடம்பெறும் அரசியல் மோதல்களை பின்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்லுமாறும் இதன்போது மகிந்த ராஜபக்க்ஷ கேட்டுகொண்டுள்ளார்.

Read More

கைவிடப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின், வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் -03- விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகி விடும் : ஆன்டிரியா உறுதி

ஐரோப்பிய யூனியனில் இருந்து எதிர்வரும் ஆண்டுக்குள் பிரிட்டன் விலகி விடும் என அந்நாட்டின் பிரதமர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள ஆன்டிரியா லீட்சோம் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக கடந்தமாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே…

Read More

ஊழல் எதிர்ப்பு குழு தொடர்ந்து முன்னெடுப்பு

ஊழல் எதிர்ப்பு குழுச் செயலகத்தை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாரதூரமான குற்றம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அது தொடர்பில் பரிசீலனைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காக வேண்டி ஊழல் எதிர்ப்பு குழு செயலகமானது அமைச்சரவை தீர்மானத்தின் படி 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

Read More

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு 7, 8 ஆம் திக­தி­களில் விடு­முறை

நோன்புப் பெரு­நா­ளை­யொட்டி, நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பிரிவின் பணிப்­பாளர் இஸட்.தாஜூடீன் தெரி­வித்தார். குறித்த இரு விடு­முறை தினங்­க­ளுக்­கு­மான பதில் பாட­சாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் நடாத்­தப்­பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்­டுள்­ளது. இது ­கு­றித்து, கல்­வி­ய­மைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­தா­கவும் பணிப்­பாளர் தாஜூடீன் மேலும் தெரி­வித்தார்….

Read More

ஞானசாரருக்கு எதிராக உடனடி நடவடிக்கை – ஜனாதிபதி உறுதியளிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத்…

Read More

இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இநத நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (2) காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

Read More

விவசாயத்துறைக்கு உலகவங்கி நிதியுதவி

நாட்டில் விவசாய அபிவிருத்தியை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியினால் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி கழகத்திடமிருந்து ஒதுக்கப்பட்ட இந்த தொகையானது வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாய அமைச்சு மற்றும் முதல்நிலை கைத்தொழில் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்தே இந்த திட்டத்தினை செயற்படுத்துகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறையில் அபிவிருத்தி, வர்த்தக அபிவிருத்தி, ஏற்றுமதி மைய…

Read More

வற்வரி பிரச்சினைக்கு தீர்வு!

வட் வரி சம்பந்தமான பிரச்சினை எதிர்வரும் 4ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வட் வரி சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் ஒன்று அன்றைய தினம் நிதியமைச்சில் இடம்பெறும் என்று அமைச்சர் கூறினார். கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம வாயிலின் நிர்மாணப் பணிகள் குறித்து ஆராய கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்

Read More