Headlines

23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவு!

பதவிக்காலம் முடிவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி  தெரிவித்தார். மேலும்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை குறிப்பிடத்தக்கது.

Read More

தீவிர சிகிச்சைப் பிரிவில் தெவரப்பெரும!

மீகஸ்தென்ன பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென நேற்று பகல் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவரை காப்பாற்றிய பொதுமக்கள் இவரை உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன், பிரதி அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இவர் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிரதி…

Read More

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அத்துமீறிவிட்டன. ஜனாதிபதிக்கு றிஷாத் கடிதம்!

-சுஐப் எம் காசிம்- பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆட்சியில் அழுத்கம, பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் பொலிசாரிடம்…

Read More