Headlines

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ 90-100 ரூபா வரையிலும், தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 120 முதல் 145 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. சீனியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. ஒரு கிலோ சீனியின்…

Read More

மன்னார் உப்புக்குளம் மைதானத்தை புனரமைக்க நிதியுதவி

‘இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி’ என்னும் தொனிப்பொருளை மையமாக வைத்து வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மன்னார் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் தனது நிதியில் இருந்து மன்னார் உப்புக்குளம் அல் பதா விளையாட்டு மைதான புனரமைப்புக்காக 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை இன்று திங்கட்கிழமை அல் பதா விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் தனது அலுவலகத்தில் வைத்து கையளித்தார். மேலும்…

Read More

மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமனம்

பிரபல சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (04/07/2016) கைத்தொழில்,வர்த்தக அமைச்சு அலுவலகத்தில் வைத்து கையளித்தார். சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அனுராதபுர மாவட்டம் கனேவல்பொலவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார். கொழும்பு, பல்கலைக்கழக சட்ட முதுமாணித்துறை…

Read More

இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் – அமைச்சர் றிஷாத்

இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் புல்லட் சார்சென்பயர் (Bulat Sarsenbayer) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (04/07/2016) சந்தித்து இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக உறவுகள் தொடர்பில் பேச்சு நடத்தினார். அடுத்த வருடம் 2017 இல் கஸகஸ்தானில் நடைபெறவுள்ள எக்ஸ்போ காண்காட்சிக்கான அழைப்பை அமைச்சர் றிசாத்திடம் அவர் விடுத்தார்.

Read More

பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு அவதானம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பங்களாதேஷ் தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னரே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இந்நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். எமது நாட்டின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுகின்றனர். நேற்று முந்தினம்(02) பங்களாதேஷ் டாக்கா உணவகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

ஊடகவியலாளர்களுக்கு உரிய பயிற்சி கிடையாது

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு போதியளவு பயிற்சி கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலி அலோசியஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஊடகத்துறை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் காண்பித்து வரும் அக்கறை எதிர்காலத்தை சிறந்த வகையில் அமைக்கும். ஊடகத்துறையில் காணப்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்று போதியளவு பயிற்சி இன்மையாகும். சில வேளைகளில் நாம் உரையயொன்றை ஆற்றினால் மறுநாள் காலையில் முற்றிலும் மாறுப்பட்ட…

Read More

போராட்டம் வெற்றியாம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. இன்று (4) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்றையதினம் அரை நாள் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையிலேயே தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த வேலை நிறுத்தம்…

Read More

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.  இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’…

Read More

எட்டாக்கனியாகிப் போன நுரைச்சோலை வீடுகளும்; வயிற்றில் பால் வார்க்கும் அமைச்சர் றிஷாதின் அறிவிப்பும்

-சுஐப் எம்.காசிம், அஷ்ரப் ஏ சமத் – “நுரைச்சோலை” – நமக்கு உடன் ஞாபகத்துக்கு வருவது புத்தளம் அனல்மின் நிலையமே. இற்றைக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை மக்களின் பேசுபொருளாக அம்பாறையில் அமைந்துள்ள நுரைச்சோலை இருந்தது. 200௪பூ டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சுனாமிப் பேரழிவு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களையும், வீடுகளையும் அழித்தது. “சுனாமி” எனும் கடற்பேரலை அம்பாறைக் கரையோரப் பிரதேசங்களிலும் தனது மூர்க்கத்தனத்தைக் காட்டியது. கொடூரமான இந்த…

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே  இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…

Read More

எதிர்கால கட்டட நிர்மாணம் அனுமதி பெறப்படுவது கட்டாயம்

இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைஅமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்றுகொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின்போது அதிக பாதிப்புக்கான ஏதுக்களை குறைக்கும் நோக்கிலேயேஇந்த கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதைக்கு 10 மாவட்டங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. எனினும் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. நாடாளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒருலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டிl ஆராய்ச்சி…

Read More

இலங்கைக்கு நிதியுதவி முன்னணியில் சீனா!

இலங்கைவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, இலங்கை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Read More