மும்மண்ன பாடசாலை மைதான இழுபறிக்குத் தீர்வு
மும்மண்ன முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதான பிரச்சினைக்குத் தீர்வுகிடைக்க உதவி செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு, பாடசாலை அபிவிருத்திச்சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. இந்தப் பாடசாலைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட விளையாட்டுமைதானக் காணியை, அந்தப் பிரதேசத்தில் வாழும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் உரிமை கொண்டாடி, மாணவர்களின் விளையாட்டுப் பயிற்ச்சிக்குத் தடையாக இருந்தனர், கடந்த பல மாதங்களாக நடந்த இந்த இழுபறி இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு, இரண்டு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்திருந்தது,…
