துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்
துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும்…
