Headlines

வெள்ளவத்தையில் தீ!

வெள்ளவத்தை – இராமகிருஷ்ண மிஷன் சந்தியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் தீ பரவியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை!

தற்போதைய அரசில் உள்ள குற்றச்செயல்கள் புரிவாராயின் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான சந்திப்பில் வைத்தே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Read More

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா…

Read More

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59) இருவரும் சேர்ந்து தமது மகன்கள் லூகாஸ் லியோனார்டு(19) மற்றும் கிறிஸ்டோபர் (17) ஆகியோரை தேவாலய ஆலோசனைக் கூட்டத்தின்போது கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதில் மூத்த மகன் லூகாஸ் உயிரை இழந்தார். மேலும் கவலைக்கிடமான நிலையில் இளைய மகன் கிறிஸ்டோபர் இப்பகுதி மருத்துவமனையில்…

Read More

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்

என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00…

Read More

கெஹெலியவும் விசாரணை குழுவின் முன் ஆஜரானார்!

முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சுசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த வாக்குமூலம் வழங்குவதங்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சாங்க தொலைக்­காட்சி ஒன்றில் விளம்­ப­ரங்­களை பிர­சு­ரித்­த­மைக்கு கட்­டணம் வழங்­காமை தொடர்­பி­லேயே இவ­ரிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெலே சுதா மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு!

பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் கம்பொல வித்தான சமந்தகுமார மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட வெலே சுதாவுக்கு நீதிவான் பிரித்தி பத்மன் சூரசேன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read More

வெளிநாடுகளில் 599 இலங்கையர்கள் உயிரிழப்பு

இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது….

Read More

ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறித்த பிரதேசங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதோடு, நிலச்சரிவு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த சில…

Read More

மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். எனினும், இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு…

Read More

கண்ணீரை சிந்தவைக்கும் நேர்மை – சவூதி அரேபியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்..!

சவூதி அரேபியாவைச் சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்ட பிறகு அந்த நிறுவனம் தவறுதலாக இவரின் வங்கி கணக்கிர்கு ஓரு இலட்சம் சவுதி ரியால்களை அனுப்பிவிட்டது (சுமார் 37 லட்சம் இலங்கை  ரூபாய்) தனது கணக்கில் ஒரு இலட்சம் ரியால் வந்ததை கண்ட அந்த மனிதர் அது தமக்கு உரியதல்ல என்பதை உறுதி படுத்தியதும் அந்த பணத்தை வங்கி கணக்கிலிருந்து விடுவித்து உரிய நிறுவனத்தை தேடி சென்று ஒப்படைத்தார்…

Read More