Headlines

மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம்




தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர்.

எனினும், இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *