Headlines

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்




சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் பேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், “ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் வந்த முதலே அமெரிக்காவுடனான உறவு சீர்கெட தொடங்கிவிட்டது. புதினின் மிரட்டலுக்கு எதிராக அமெரிக்கா எதிர்த்து நிற்க வேண்டும். முக்கியமாக சிரியாவில்” என்று தெரிவித்தார்.

மேலும், சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ரஷ்ய படைகளின் விமானங்கள் தவறுதலாக மோதிக்கொள்ளாமல் இருக்க ரஷ்யாவுடன் பேச்சு நடத்திய வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *