Headlines

இன்று தீர்வு கிட்டலாம்!

தமது கோரிக்கைகளுக்கு இன்று (8) எழுத்து மூல தீர்வு கிடைக்கலாம் என, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வேலை…

Read More

பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்

வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று (5) முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார். பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க…

Read More

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்றும் (4) தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் இவர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 9ஆவது நாளாகவும் தொடரவுள்ளதாக பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலே தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் போராட்டம் தொடர்வதாகவும்…

Read More

கொழும்பில் மீண்டும் ஒரு போராட்டம்!

சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அமைப்பை உருவாக்கிய ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதை கண்டித்தே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள். சனச வங்கியை மக்கள் மத்தியில் பிரசித்தி பெறச் செய்தவரே குறித்த சங்கத்தை ஸ்தாபித்தவராவார். அரசாங்கத்தின் உதவியுடன் வங்கித் தலைவர்களே இவரை…

Read More

“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”

“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை. இந்த பாதயாத்திரையின் நோக்கம்  மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர். ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்….

Read More

கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!

கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள் இன்று காலை கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று மாதத்தின் முதல் நாள், வாரத்திலும் முதல் நாள். கொழும்பு தலைநகரம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் இன்று மக்கள் மத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கின்றது. இந்த பாதயாத்திரை கொழும்பை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் கொழும்பில் இவர்கள் எங்கு…

Read More

கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்

-ஜவ்பர்கான் – கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Read More

சமாதியை கடக்கும் போது சத்தமில்லை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Read More

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான  வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm

Read More

பாதயாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது!

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை, வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகர் முழுதும் ஸ்தம்பிதம்!

ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்கின்றது. ஆயுர்வேத வைத்திய பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவது…

Read More

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read More