Headlines

வற்வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களுக்கான வற்வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (19) பிலியந்தல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கெஸ்பெவ, பிலியந்தல, பொகுந்தர பிரதேச வர்த்தகர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வற்வரி அதிகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Read More

கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டுள்ள 495 ரூபாவிற்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோழி பண்ணை உரிமையாளர்களின் வரி நீக்கப்பட்டு, அவர்களுக்கான சலுகைகள் செய்து தரப்படுமாயின் குறித்த…

Read More

வட் வரிக்கு எதிர்ப்பு – கொழும்பில் ஆர்பாட்டம்

வட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாட்ர் வெயார் ஊரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு, குவாரி பாதைக்கு அருகாமையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. மேலும், ஹார்ட் வெயார் ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை தொடரவுள்ளர். இதன்காரணமாக வியாபாரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஒல்கொட் மாவத்தையில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

பேலியகொடையில் ஆர்ப்பாட்டம்

களனி – பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

கைவிடப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின், வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் -03- விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

புளுமெண்டல் பகுதியில் பதற்ற நிலை – பொலிஸார் குவிப்பு

புளுமெண்டல் பகுதியில் சட்டவிரோதமாக அமையப்பெற்றுள்ள வீடுகளை உடைத்தமையினால் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரையும் மீறி வீடுகள் உடைக்கப்படும் இடத்தை நோக்கி மக்கள் படையெடுக்க முயற்சிக்கின்றமையால் பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மேலும் புளுமெண்டல் பகுதியில் பிரதான வீதியில் சில மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Read More

வேலை நிறுத்த எச்சரிக்கை : தபால் தொழிற்சங்கங்கள்

தமது தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு வாக்குறுதி அளித்ததன் படி தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லையென தபால் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன. குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அதிகாரிகள் பெற்றுக்கொண்ட கால அவகாசம் எதிர் வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சின்தக பண்டார தெரிவித்தார்.

Read More

நாட்டின் அனைத்து மருத்துவ பீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

நாட்டின் அனைத்து அரச மருத்துவபீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி ஹைலெவல் பாதையினூடாக தும்முல்லைக்குச் சென்று பம்பலப்பிட்டி, காலி வீதியினூடாக பிரதமரின் அலுவலகம் நோக்கிச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மருத்துவபீட மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹைலெவல் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த பாதையினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்களை தொடர வேண்டாம்

துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கை குற்றம் புரிந்தவரை பாதுகாக்கும் செயல் என துறைமுக அபிவிருத்தி அமைச்சின் செயளாளர் மஞ்சுல குணசேகர  தெரிவித்தார்.

Read More

தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவு

இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (16) நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

Read More

அரநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுவரும்அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அமைச்சர்களின் வாகனங்கள் திரும்பிச் செல்ல முடியாதவாறு சிலர் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More