Headlines

கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!




கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள் இன்று காலை கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இன்று மாதத்தின் முதல் நாள், வாரத்திலும் முதல் நாள். கொழும்பு தலைநகரம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் இன்று மக்கள் மத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கின்றது.

இந்த பாதயாத்திரை கொழும்பை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் கொழும்பில் இவர்கள் எங்கு செல்கின்றார்கள், எங்கு கூட்டத்தை நடாத்தப் போகின்றார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த இரகசியத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் மறைத்தே வைத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *