Headlines

இன்று தீர்வு கிட்டலாம்!




தமது கோரிக்கைகளுக்கு இன்று (8) எழுத்து மூல தீர்வு கிடைக்கலாம் என, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.

ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்தத்தைக் கைவிட வாய்ப்புள்ளதாக, எட்வட் மல்வத்தை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *