Headlines

நாளை மட்டக்களப்பில் போராட்டம்!

ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார். இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று (13) பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

Read More

கொழும்பில் மாணவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்

தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

Read More

அளுத்கடையில் இருந்து ஆரம்பிப்போம்

காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) பகல் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அளுத்கடை நீதிமன்றிற்கு முன்னால் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது ‘அளுத்கடையிலிருந்து ஆரம்பிப்போம்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் எதிர்ப்பு முன்னணி உள்ளிட்ட பல இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் இதை ஒழுங்கு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அழிவடைந்து வரும் இயற்கையை…

Read More

மருத்துவர்கள் சிவப்பு அறிக்கை விடுப்பு : நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.!

நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இதன் முதற்கட்டமாக நாளை அம்பாறை வைத்தியசாலையின் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயளாலர் வைத்தியர் நாலின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அனைத்து மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்…

Read More

கம்பளை நகரில் ஆர்பாட்டம்

-எம்.எம்.எம். ரம்ஸீன் – கம்பளை நகரில் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொட்டப்படும் குப்பைகூழங்கள் கடந்த ஒரு வார காலமாக  அகற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 18.05.2016 கம்பளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கம்பளை நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கம்பளை நகர சபையை சென்றடைந்தது.இதில் கம்பளை பகுதி சமயத் தலைவர்கள் நகர வர்த்தகர்கள் குடியிருப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இந்தஎதிர்ப்பு ஆரப்பாட்டத்திற்று ஒததுழைப்பு வழங்கும்…

Read More

நாடு முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும்  வைத்திய அதிகாரிகள் இன்று ஒரு மணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் வைத்திய கல்லூரியை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மேலும் குறித்த மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று நண்பகல் உணவு இடைவேளையின் போது அரச வைத்தியர்களால்…

Read More

மஹிந்த தலைமையில் இன்று போராட்டம் வெடிக்கும்

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்­கு­பற்­ற­லுடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் இடம்­பெறும். எமக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். எனவே, அச்­ச­மின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் இன்­றைய எதிர்ப்புப் பேர­ணியில் கலந்­து­கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை துண்­டாட வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. ஏனெனில், உண்­மை­யான சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் கூட்டு எதிர்…

Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பேரணி

பல்கலைக்கழகத்திற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பல குறைப்பாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமை,கல்வி தனியார் மயப்படுத்தல் மற்றும் பல்கலைக்கழக்திற்குள் பணம் வசூலித்தலை தடுத்தல் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பேரணி நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்வினை பெற்றுக் கொடுக்காததாலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி இந்த பேரணியை ஏற்பாடு செய்திருப்பதாக அனைத்து பல்கலைக்கழக…

Read More

கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்.

Read More

யாழில் பாரிய போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் யாழில் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்நிலையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் 14பேர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று (01) செவ்­வாய்க்­கி­ழமை எட்­டா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இன்று முற்­பகல் 10 மணி­ய­ளவில் யாழ்ப்­பாண பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு முன்­பாக இக்­க­வ­ன­யீர்ப்பு…

Read More

பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடம் கடந்த 20 தினங்களுக்கு மேல் இயங்காத நிலையில் இருப்பதாகவும் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிருக வைத்திய பிரிவு மாணவர்கள் ‘தெய்யொத் தன்னனே’ (கடவுளுக்கும் தெரியாது) என்ற நாடகத்தை பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி திறந்த வெளிநாடக அரங்கில் அரங்கேற்றியதும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாகவும் ஏற்பட்ட சர்ச்சையே இவ்வாறு மிருக வைத்திய பீடம் ஸ்தம்பிதம்அடையக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….

Read More