Headlines

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

ஞானசாரர் தலைமையில் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது…

Read More

இருதய நோயாளர்களுடன் விளையாடும் ஊழியர்கள்

இருதய சத்திரசிகிச்சைகளுக்கு உதவும் தெரபிஸ்ட் என்ற சிகிச்சையாளர்கள் நாளை (25) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர். இதன் காரணமாக இருதய சத்திரசிகிச்சைகள் பிற்போடப்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர சத்திரகிசிச்சைகளில் தமது தொழில்சங்கத்தினர் ஈடுபடுவர் என்று தெரபிஸ்ட் சிகிச்சையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 10 பேர் இருதய சத்திர சிகிச்சைகளுக்காக தம்மை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிபர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நாடு முழுவதுமுள்ள அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெரிவிப்பதுடன் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அறிவிப்பதாகவும், விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்வதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப் பெரும உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று புதன்கிழமை (21.09.2016) காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டைப்…

Read More

இரட்டைப் படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில்…

Read More

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்லப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், உமா ஓயாத் திட்டத்தின் விளைவாகத் தமக்கான நீரைத் தாம் இழப்பதாகத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று புதன்கிழமை (21) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

Read More

கால அவகாசம் தேவை – அமைச்சர் செனவிரத்ன

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என அமைச்சர் W.D.J.செனவிரத்ன தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் குறித்த அதிகாரிகளுடன் அமைச்சர் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தன்னால் இயன்றதை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், எனினும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் மிகவும் நிதானமாக குறித்த விடயங்களுக்கு தீர்வைப் பெற வேண்டும்’ எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அதன் அறிக்கையினை அமைச்சரவையில் சமர்பிப்பதற்கு கால அவகாசம்…

Read More

அம்பாறையில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வீதியை மறித்து பட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, பொதுமக்களின்…

Read More

இசுறுபாயவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யத்தடை

வைத்தியர்களின் பிள்ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் வகுப்புத் தடைக்கு உள்ளான மாணவர்களுக்கு வகுப்புத் தடையினை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தரது அலுவலகத்தை மூடவிடாது நேற்று இரவு வரை இவர்களது ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை வகுப்புத்தடைக்கு உள்ளான மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் இருப்பதாகவும், இவர்களுக்கான வகுப்புத்தடை தற்காலிகமானது என்றும் எதிர்வரும் 23ஆம்…

Read More

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீ்ர்மானித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படும் எனவும் மருத்துவ பீட மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.

Read More

வகுப்பு தடையை நீக்கக் கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

– ஏ.எம். றிகாஸ் – கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 27 மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள வகுப்­புத்­த­டையை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு கோரி கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். மட்­டக்­க­ளப்பு -வந்­தா­று­மூலை வளா­கத்­துக்கு முன்­பாக இந்த ஆர்ப்­பாட்டம் இடம்பெற்றது.

Read More