Headlines

நாட்டில் மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடை­செய்­யு­ங்கள் – சிங்­கள ராவய

பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடை­செய்­யு­மாறும் முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நிறை­வேற்­று­வ­தற்கு மாத்­திரம் தனி­யான விஷேட சட்­ட­மொன்­றினை நிறை­வேற்­று­மாறும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. சிங்­கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­வதால் இது தடை­செய்­யப்­பட்டால் மாத்­தி­ரமே இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது. சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­திலே மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள்…

Read More

போனை சார்ஜ் செய்ய உதவும் தோல் மணிபர்ஸ்

ஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ‘ஐ போன்’ பயன்படுத்துபவர்கள் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் இறங்குவதால் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கையுடன் சார்ஜரை எடுத்து செல்வதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதை போக்க தற்போது புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய சார்ஜரை தயாரித்துள்ளனர். சார்ஜர் செய்யும் ‘பவர் பேங்க்’ மடக்கி வைக்க வசதியாக இருக்கும் தோல் மணிபர்சுக்குள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன’ – வஃபா பாறுக்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன. தேர்தல் ஆணையகத்தின் பரிந்துரையை குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பழி வாங்குவதிலேயே அதிகார வெறியர்கள் கரிசனை காட்டுகின்றார்கள். சிறையில் அடைப்பதால் ஏற்படவிருக்கும் லாப நட்ட கணக்கில் தெளிவின்மையால், இன்னும் கைது செய்யாமல் விசாரனை என்ற பெயரில் பாரிய உளவியல் தொல்லைக்குள்ளாக்குகின்றார்கள். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதால், சில ஆயிரம் இனவாத வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாம் என நிச்சயமானால், அவரை…

Read More

மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீக்கிரை!

அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (19)  இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அவிஸ்ஸாவெல பொலிஸாரும்,பிரதேசவாசிகளும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்றும்,ஆனால் வீட்டிலிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

வெசாக்கை முன்னிட்டு தலைகள் வெளியீடு

வெசாக் தினத்தை முன்னிட்டு 3 விசேட தபால் தலைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெவ்வேறு வகையான மூன்று தூபிகள் அம்முத்திரைகளில்  பிரசுரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முன்மொழிவுகளை பௌத்த சாசன அமைச்சு முன் வைத்துள்ளது. இது தொடாபான கலந்துரையாடலில் தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உள்நாட்டமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தபால் துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

வடக்கில் இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி!!!

வடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ரிவி தெரணவில் நேற்று (26) இரவு ஔிபரப்பான ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், ´எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை நான் அமைச்சரவை விசாரணைக்கு வழங்கவுள்ளேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய…

Read More

இந்தியாவின் சிறந்த நாடாளமன்ற உறுப்பினாராக முஸ்லிம் ஒருவர் அறிவிக்க பட்டார்!

இந்தியாவின் நாடாள மன்றத்திர்கு தேர்ந்து எடுக்க பட்டு செல்லும் பலர் நாடாள மன்றத்தை பொழுது போக்கு கூடமாகவும் சண்டை களமாகவும் மாற்றி வரும் நிலையில் நாடள மன்றத்தை உரிய முறையில் பயன் படுத்திய சிறந்த நாடளமன்ற உறுப்பினராக ஹைதரபாத் சிங்கம் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசதுதீன் உவைசி அறிவிக்கபட்டுள்ளார் விடுப்பின்றி தொடர்ந்து நாடுளமன்றத்திர்கு வருதல் சிறந்த பேச்சாற்றல் விவாதங்களில் திறமையுடன் பங்கு பெறுதல் ஆகிய விசயங்களில் அசதுதின் உவைசி சிறந்து விளங்குவதால் அவரை சிறந்த நாடளமன்ற உறுப்பினர்களில்…

Read More

ஹெட்போனால் ஏற்படும் விபத்துகள் அதிகம்

வாகனத்தை செலுத்தும் போது அலைபேசி மற்றும் ஹெட்போன் ஆகியவற்றை பாவிப்பதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் திடீர் விபத்துகளின் எண்ணிக்கை 37,000 எனவும் அதில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ‘அவசர விபத்துக்களை தவிர்த்தல்’ எனும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!

-முர்ஷித் கல்குடா- ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை (06) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 07 பேரும், சுயேட்சைக்குழு சார்பில் 08 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 01 நபரும்,…

Read More

புத்தளம் மதரஸதுல் நபவியாவுக்கு இலத்திரனியில் சாதனங்கள் மற்றும் கதிரைகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் அல் மதரஸதுல் நபவியாவுக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், ஸ்மார்ட் TV (LED) மற்றும் சவுண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே மேற்படி உபகரணங்கள், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வின், விசேட அதிதியாக வைத்தியர் திருமதி.திபாயா பங்கேற்றிருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான…

Read More

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது!

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் தாக்கல் செய்யப்பட் இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.   -ஊடகப்பிரிவு-

Read More

ஜனாதிபதி சிங்கம் போன்று செயற்பட வேண்டும் – சோபித தேரர்

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எவருக்கும் அடிபணியாமல் நாட்டில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார். நாட்டின் சட்டத்தில் எவரும் தலையிடாதவாறு நாட்டின் நலனுக்காக சகலதையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட மாதுலுவாவே தேரர், எவருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியமில்லையெனினும் ஜனாதிபதி அவர்கள் சிங்கம் போன்று தலைநிமிர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மாக்கும்புரவில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியுடன்…

Read More