Headlines

“மறிச்சுக்கட்டி ஹமீது மரைக்காரின் (கலீபா மாமா) மறைவு மண்ணுக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஹமீது மரைக்கார் (கலீபா மாமா) அவர்களின் மறைவு மிகவும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில், “மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீது மரைக்கார், 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம், இஸ்மாயில்புரம், நியூ சிட்னி முகாமில் தங்கியிருந்த போது, அந்த முகாமுக்குத் தலைமைதாங்கி, அங்கிருந்த மக்களை சிறந்த முறையில் வழிநடாத்தினார். அதன் பின்னர் நியூ சிட்னி மக்களுக்கென தனியான மீள்குடியேற்ற…

Read More

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம்!

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “கௌரவ முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான எனது உறவினரும் நெருங்கிய நண்பருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்ட செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது தந்தை வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்ட நண்பர்…

Read More

“நஜீப் ஏ.மஜீதின் முன்மாதிரிகள் நாகரீக அரசியலுக்கே அடித்தளம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

நாடறிந்த அரசியல்வாதியும் முதலாவது முஸ்லிம் முதலமைச்சருமான நஜீப் ஏ.மஜீத் அவர்களின் மறைவு நாகரீக அரசியலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாகரீக அரசியலின் நாயகன் மர்ஹும் நஜீப் ஏ.மஜீத். சிறந்த அரசியல் புலத்தில் புடம்போடப்பட்ட அவரிடம் ஆழ்ந்த அனுபவங்கள் இருந்தன. தந்தை அப்துல் மஜீதின் பாசறையே அவரது ஆளுமைகளை முழுமைப்படுத்தியது. அவரது தந்தையார் மூதூர் தொகுதியின்…

Read More

“முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருகிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மன்னார், மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலீபா மரைக்கார் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “மர்ஹூம் இக்பால் ஹாஜியார் அவர்கள் முசலி பிரதேச சபையின் உறுப்பினராகவும் சமூர்த்தி அதிகாரியாகவும் இருந்து, அந்தப் பிரதேச மக்களின் நலனுக்காகப் பணிபுரிந்தவர். முசலியின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட அன்னார், புத்தளத்திலும் வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும்…

Read More

முஹம்மத் நிஷாத் குவைதில் வபாத்!

-ஹரீஸ் ஸாலிஹ் – மினுவாங்கொடையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நவ்ஷாத் அவர்களின் செல்வப் புதல்வர் 19 வயதுடைய முஹம்மத் நிஷாத் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் குவைத் நாட்டில் காலமானார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று  (22) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து,  குவைத் சப்ஹான் மையவாடியில் இடம்பெற்றது அல்லாஹ் அவரின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக..!

Read More

மக்காவில் இலங்கையர் வபாத்

-எம்.எம்.அஹமட் அனாம் – ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.ஹயாத்து முஹம்மட் (வயது 67) என்பவர் மார்க்கக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே, உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர் தனது மனைவியுடன் மக்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் கூறினர்.

Read More

பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்

-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…

Read More

உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி

– பதுர்தீன் சியானா – அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று புதன்கிழமை (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி, கஹடகஸ்திகிலிய – ஈத்தல்வெட்டுனுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.மஹீஸா (வயது 7) எனவும் குறித்த சிறுமியின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின்…

Read More