Headlines

நாளை விடுமுறை இல்லை

அரசாங்க ஊழியர்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை இல்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இயற்றை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் அந்தந்த கல்வி வலய பணிப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

என்னை சேர் என கூப்பிட வேண்டாம் – ஜனாதிபதி மைத்திரி

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும். 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல….

Read More

2,3 மாடிகளுக்கு அனுமதிபெற்று 5,6 மாடிகளைக் கட்டுபவர்களுக்கு அபராதம்

இரண்டு, மூன்று மாடிகளை கட்ட அனுமதியைப் பெறும் சிலர் சட்டவிரோதமாக ஐந்து, ஆறு வரை மாடிகளை நிர்மாணிப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அபராதம் அறவிடுமாறு, உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், கட்டடங்களை நிர்மாணிக்கும் அனுமதியை இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற விரும்புபவர்களுக்காக “எக்ஸ்பிரஸ் சர்விஸ்” திட்டத்தை விரைவில்…

Read More

ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே…

Read More

றிஷாத் பதியுத்தீனுக்கு பாடம்புகட்ட மஹிந்தவின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டுமாம் – கூறுகிறார் அப்துல் காதர்

எம்.ஏ. அமீனுல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுத்தீனின் நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இது தொடர்பாக…

Read More

தேசிய அரசாங்கத்தில் சிறந்த நாட்டை உருவாக்குவோம்: ரணில்

பாரா­ளு­மன்ற தேர்­தலின் பிற்­பாடு ஐந்து வரு­டங்கள் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்போம். அத­னூ­டாக எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சிறந்த நாட்டை பெற்­றுக்­கொ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். எமது அரசின் நூறுநாள் வேலைத்­திட்டம் பாரிய சவால்­மிக்­கது. அதனை நிறை­வேற்­று­வதே எமது இலக்­காகும். பொது இலக்­கு­களை நிறை­வு­கண்டு நூறு நாட்­களின் பிற்­பாடு பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்வோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்பு றோயல் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­க­ளான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட புதிய அரசின்…

Read More

சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்

வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின் அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…

Read More

முசலி பிரதேசத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

இன்றைய தினம் (16) மன்னார், முசலி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்த பாலைக்குளி, முள்ளிக்குளம், மரிச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா, முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பைறூஸ் மற்றும் கட்சியின்…

Read More

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்- அமைச்சர் றிசாத்  

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப்  பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (20/10/2016) தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவராக ஸிராஸ் மீரா சாஹிப் பதவியேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலே இடம்பெற்ற உடன்படிக்கையின் விளைவாக அஷோக் லேலண்ட்…

Read More

கட்டாரில் இலங்கையர் மாரடைப்பினால் வபாத்

வில்பொல  அரணாயக்கவை  சேர்நத சகோதரர் ரஹ்மதுல்லாஹ் 23-08-2014 காலை மாரடைப்பால் கட்டாரில் அல் ருமைலா  வைத்தியசாலையில் காலமானார்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்  கத்தாரில் தொழில் புரிந்து வந்தார். தற்பொழுது அவரது ஜனாஸா கத்தார் அல் ருமைலா வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ் நாளை  அபு ஹமூர்   மையவாடியில் இடம் பெரும். நேரம்  பின்னர் அறிவிக்கப்படும். அன்னார் சகோதரர் பஸ்லுல்லாஹ் – Qatar Airways (00974 55898066…

Read More

சிரியா மக்களை “அகதிகள்’ என அழைக்க நாங்கள் விரும்பவில்லை – சவூதி அரேபியா

சிரியாவில் உள்நாட்டுச் சண்டை ஆரம்பமானது முதல் அங்கிருந்து வெளியேறிய 25 லட்சம் அகதிகளை வரவேற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. “சிரியா அகதிகளை சவூதி அரேபியா அலட்சியம் செய்கிறது’ என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாடு அவ்வாறு கூறியுள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய அரசுச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது: சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து, அங்கிருந்து தப்பி வந்த 25 லட்சம் பேரை நாங்கள் வரவேற்றுள்ளோம். அவர்களில் லட்சக்கணக்கானோருக்கு சவூதி அரேபியாவில் தங்குவதற்கான உரிமை…

Read More

ஹிலரி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தெரிவாகியுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் உலக நாடுகள் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் தான்…

Read More