Headlines

அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மூதூரில் இரண்டு காபட் வீதிகள் மக்கள் பாவனைக்கு மக்களிடம் கையளிப்பு





அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுடை முயற்சியில்.

நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் விசேட நிதியில் வர்த்தக கைத்தொழில்கள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கடந்த வருடம் மூதூரில் புனரமைக்கப்பட்ட இரண்டு காபட் வீதிகள் மக்கள் பானைக்கு விடும் நிகழ்வு இன்று (24.09.2017) பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அப்பிரதேச மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கு மிகுந்த உற்சாக வரவேட்பளிக்கப்பட்டு இவ்வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிகழ்வில் மூதூர் , தோப்பூர் மத்திய குழு தலைவர்கள் பெருந்திரளான மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *