News
அளுகோசு பதவி : 13 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை
மரணத் தண்டனை கைதிகளை தூக்கில் போடும் தொழிலான அளுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை 24 விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பெற்றுளதாகவும் இம் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் நேர்முகத் தெரிவின் போது தகுதியான இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத் தொழிலுக்கு ஆகக் குறைந்த கல்வித் தகைமை 8 ஆம் தரம்வரை கல்வி கற்று இருக்க…
சீரற்ற காலநிலை : வாகன சாரதிகள் அவதானம்
– க.கிஷாந்தன் – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். வாகனத்தில் முன் விளக்கு ஒளிரவிட்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மதவாச்சியில் பஸ் விபத்து : 5 பேர் படுகாயம்
மதவாச்சி – நாவற்குளம் பிரதேசத்தில் இரண்டு பஸ் வண்டிகள் இன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மற்றும் விமானப் படையினரின் பஸ் வண்டி என்பன வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் இடம்கொடுக்கும் போது, மழை காலநிலை காரணமாக, குறித்த வீதி வழுக்கியதில் இந்த இரண்டு பஸ்களும் வீதியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது…
உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஜப்பான் ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் காணி பறிபோகிறது
டி.ஏ. ராஜபக்ஸ அமைப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேறும் எந்தவொரு பணிக்காகவும் குறித்த காணி பயன்படுத்தப்பட மாட்டாது என நிபந்தனையை மீறி ராஜபக்ச அமைப்பு, சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவைக்கு காணிகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் குறித்த காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த சட்டவிரோத…
இஸட் வெட்டுப் புள்ளிகள் வெளியானது
பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகள்http://www.ugc.ac.lk/ (link is external) என்ற இணைத்தளத்தில் பார்வையிடலாம் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து…
12 ஆம் திகதி புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார். இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றதுடன் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுக் காலை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ தலைமையில் மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில் மு.ப. 10.30 மணியளவில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும், சிறு வர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தும்…
மட்டக்களப்பு பொலிஸாரின் போக்குவரத்து விழிப்புணர்வு
மட்டக்களப்பு, பாசிக்குடா வீதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதை அடுத்து கல்குடா போக்குவரத்துப் பொலிஸார் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வுகளை நடத்தினர். வீதியில் எவ்வாறு போக்குவரத்துச் செய்வது என்பது தொடர்பான பயிற்சியும் விளக்கமும் பாசிக்குடா வீதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி விளக்கம் அளித்தனர் பொலிஸார். வாரத்தில் ஒருநாள் இந்தச் செயற்பாடுகள் நடத்தப்படும் என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
உலக ஆசிரியர் தினம் இன்றாகும்
உலக ஆசிரியர் தினம் இம்முறை ஆசிரியர்களை வலுப்படுத்தி நிலையான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினமானது நாட்டுக்கு நாடு வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கையில் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் வெறுமனே கல்வியை மட்டுமே கற்பிப்பவர்கள் அல்ல. மாறாக அவர்கள் வலுவான, நிரந்தரத்தன்மையுடைய சமூகத்தை கட்டியெழுப்ப காரணமாயிருப்பதுடன் கற்றல் அறிவினூடாக மூலமாக ஆக்கத் திறன் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புகின்றனர். மேலும் ஒழுக்க விழுமியங்கள், கோட்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு செல்ல காரணமாயிருக்கின்றனர் என…
இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: 70 பலஸ்தீனர்கள் காயம்!
பழைய ஜெருசலேம் நகரப் பகுதிக்குள் பாலஸ்தீனியர்கள் செல்லமுடியாதபடி இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும். அங்கு குடியிருக்காத பாலஸ்தீனியர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை. பலஸ்தீனர்களுக்கு எதிராக, இஸ்ரேலிய பாதுகாப்பு படை மற்றும் யூத குடியிருப்பாளர்கள் நடாத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 70 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
