News
ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள்
ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள் இன்றும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடை பெற்றது.மோட்டார் சைக்கிள்,குதிரை,மற்றும் ரேஸ் கரத்தைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக கைத்தொழில்,வணித் துறை அமைச்சர் றிசத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி,வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர்,முன்னாள் உறுப்பினர் எஹியா ஆப்தீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காதர் ஹாஜியாரின் வபாத் தொடர்பில் அமைச்சர் றிஷாத் அனுதாபம்
இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் பேசப்பட்டுவந்த ஒருவர் அப்துல் ரஹ்மான் அப்துல் காதர் இவர் யார் என்று நீங்கள் யோசிப்பதற்கு முன்னர் அவர் தான் முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் என்னும் கம்பளை ஏ.ஆர்.அப்துல் காதர் என்பதை சொல்லிவிட்ட கையோடு,அன்னாரின் சுவனத்து வாழ்வுக்காகவும் பிராரா்த்திக்க வேண்டுகின்றேன். இன்று அன்னார் இந்த உலகை விட்டு இறையடியெய்திவிட்டார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இலங்கையின் அரசியல் குறிப்பாக ஜக்கிய தேசியக்கட்சியின் மூலம் பாராளுமன்றத்திற்கு கண்டி மாவட்ட மக்களின் பிரதி நிதியாக வந்தவர் தான்…
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதர் காலமானார்!
முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் அவர்கள் தனது 79 வது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததார்
பெறுமதி வாய்ந்த மனித வளம் முதியோர்களே : ஜனாதிபதி
இனிமையான வயோதிபம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த மனித வளமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம் முதலே கீழைத்தேய மக்கள் முதியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் உயர்ந்த ஸ்தானத்தை வழங்கிவந்துள்ளனர். இலங்கையர்கள் தங்களது விரிந்த குடும்ப முறைமையில் முதியவர்களுக்கு ஒரு விசேட இடத்தை…
பெண் பணியாளர்களுக்கு பதில் ஆண் சேவையாளர்-வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு
பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு…
பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரி அதிபருக்கு எதிராக பாதிக்கபட்ட மாணவியின் பெற்றோர் உண்ணாவிரதம்
-நூர்தீன் பவுஸ் – பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் அண்மையில் அதிபர் அவர்களினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகளாலும் ,மாணவி ஒருவருக்கான பரிட்சை அனுமதியட்டை மறுக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் குறித்த மாணவியும், பெற்றோரும் நீதியினை நாடி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரை நாடிய பொழுதும் இதுவரை உரிய அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும், குறித்த மாணவிக்காக வேண்டி நீதியினை பெற வேண்டி, தற்போது, பாதிப்படைந்த மாணவியின் பெற்றோர் பொத்துவில் பிரதேச செயலகம் உண்ணாவிரதம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அரசியல்…
நாடு திரும்பும் மைத்திரியை வரவேற்க, விமான நிலையத்தில் ஏற்பாடு..!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்பும் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, இன்று நாடு திரும்புகிறார். ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று மாலை 4.00 மணிக்கு நாடு திரும்பவுள்ளனர். அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கடந்த 23ம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தனர். 29ம் திகதி அமர்வுகள் ஆரம்பமாகியதுடன்…
இலங்கையின் 5 வெளிநாட்டு வங்கிகள், விரைவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றன
இலங்கையின் நிதிச்சந்தைக்குள் மேலும் ஐந்து வங்கிகள் விரைவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி இதனை உறுதிசெய்துள்ளது. இலங்கையில் செயற்படுவதற்காக ஐந்து வெளிநாட்டு வங்கிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அண்மைக்கால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை கருத்திற் கொண்டே இந்த வங்கிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இவற்றுன் சீனா வங்கி மற்றும் ஜப்பானிய வங்கி என்பனவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது : சம்பந்தன்
நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க…
சிகரட்டின் விலையை 45 ரூபாவாக அதிகரிக்க திட்டம்
நாட்டின் சிகரட் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிகரட்டின் வரி அறவீட்டு முறைமையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் மூலமாக சிகரட் விலையை 45 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின் பிரகாரம் இதுவரை காலப்பகுதியில் 15 வயதுக்குட்பட்டவர்களில் 70 ஆயிரம் பேர் சிகரெட்டிற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில்…
மைத்திரியின் நல்லிணக்க முயற்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு
இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற் கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் அவை வரவேற்கப்பட வேண்டியவை எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரச தலைவர்களுக்கு…
வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்துக்கு ‘செக்’ வைத்த அமைச்சர்
வௌிநாட்டுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத, வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் நீடிக்கப்படாது என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வௌிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களால் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத சில வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பற்றி முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
