News
மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்
பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகையிடுமாறு முதலமைச்சர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறித்த இடத்தை முற்றுகையிட்ட மேல் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரான பாடசாலை அதிபரையும் பெண்ணையும் தமது பொறுப்பில் எடுத்து, அவர்களை ஹொரணை வலய கல்வி அலுவலகத்திற்கு…
தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும் : மனோ கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் 6 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மலையக தமிழருக்கு கடந்த 28 வருடங்களாக இழைக்கப்பட்டுள்ள ஜனநாயக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது. எனவே இந்த மிக நீண்ட கால அநீதி…
மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சியடைய வேண்டும் – நிமல் சிறிபால சில்வா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவே மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…
புலமைப் பரிசில் பரீட்சையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 தகுதி
– எம்.ஏ.றமீஸ் – இம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானனோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்; முதன் நிலை பெற்று வரலாற்றுச் சாதமை படைத்துள்ளனர் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார். இப்பரீட்சையில் தோற்றிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 பேர் புலமைப் பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் முகம்மட் றஜாப் பாத்திமா ஹதானி 179 புள்ளிகளைப் பெற்று வலயத்தின் முதன் நிலை பெற்று பாடசாலையின் வரலாற்றுச்…
குளித்துக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி வபாத்
ட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அப்பகுதியில் கிணறுகளில் நீர் வற்றிக் காணப்படுவதால், இரு சகோதரிகளின் பிள்ளைகளான இரண்டு சிறுமிகளும் தங்களது அம்மம்மாவுடன் கேணிநகர் குளத்தில் குளிப்பதற்குச் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போதே…
கொண்டையாவின் இரத்தமாதிரி ஒத்துப்போகவில்லை
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையாவின் இரத்தமாதிரி குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேயாவை தான் கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹைபிரிட் நீதிமன்றம் இருக்கிறதா?
ஹைபிரிட் நீதிமன்றம் எனும் பொறி முறையொன்று வரப்போகிறதா? அப்படியொன்று இருக்கின்றதா? என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ் மன் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.யிடம் கேள்வியெழுப்பிய போது அவ்வாறு எதுவும் கிடையாது என்று அவர் கையால் சைகை செய்து காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது எழுந்த குழப்பகரமான நிலையின் போது “ஹைபிரிட் நீதிமன்ற விசாரணை” தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது…
மரண தண்டனை இறுதி முடிவல்ல
சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களானது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மிகவும் குறைவாகும். எனவே இப்படியான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை இறுதித் தீர்வாக அமைந்துவிடாது என்று அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின்போது ஆளும் கட்சி எம்.பி.யான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் கொண்டுவரப்பட்டதான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை…
சிறுமி சேயாவை ஜன்னல் வழியாகவே கடத்தினேன் : கொண்டையாவின் சகோதரன்
“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்போது அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் சிறுமியை தூக்கிக்கொண்டு ஒருவாறு அதே ஜன்னலினாலேயே வெளியே வந்தேன். நானே சேயாவின் கொடூர கொலைக்கு பொறுப்பு..” கொட்டதெனியாவ – கடல்கம, அக்கரங்கஹ பிரதேசத்தின் சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான கொண்டயா எனப்படும் துனேஷ் பிரிய சாந்தவின் மூத்த சகோதரன் சமன் ஜயலத் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஒரு…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk. மேற்படி இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 158 -ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி 156 –அநுராதபுரம், பொலன்னறுவை 155 –பதுளை, மொனராகலை, அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம் 153 –வவுனியா, திருகோணமலை, நுவரெலியா –
அரசியல் தீர்வே புதிய அரசின் முதல் இலக்கு : ஜப்பான் நாடாளுமன்றில் ரணில்
இலங்கையின் தற்போதைய அரசு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு ஜப்பான் அரசு உதவிக்கரம் நீட்டும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நாடாளுமன்றில் தெரிவித்தார். இலங்கையில் தேசிய ஒற்றுமை, மத, இன ரீதியாக உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே புதிய அரசின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்…
போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் -அமைச்சர் றிஷாத் சந்திப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கை்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் இதன் போது பிரதி வெளியுறவு அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக தென் இந்தியாவில் போலாந்து முதலீடுகள் தொடர்பில் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் இலங்கையில்…
