News
கடாபியின் உதவியை, நன்றியுடன் நினைவுகூறும் மஹிந்த
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால்,…
இலங்கையர்களின் ஹஜ் குழு நாடு திரும்பியது
– அப்துல் மலிக் சரீப் – பலவருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்களின் தலைமையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள RJ Travels உரிமையாளரான அல் ஹாஜ்.எம். ஜே.எம். ரிஸ்விஅவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டஹஜ் குழு நேற்று நாடு திரும்பியது. இக்குழுவை வரவேற்பதற்காகவும் அவசரமாக ஹாஜிகளை விமானநிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும் ஜித்தா சர்வதேச விமான நிலையமூத்த அதிகாரியானஎம். எச.;முஹம்மத் ரிள்வான் அவர்கள் சமூகமளிதிதிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக் குழுமக்காவில் நடந்த’கிரேன்’அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரடியாகச் சென்றுபார்வையிட்டதுடன்…
அடுத்தமாத பட்ஜெட் புரட்சியை ஏற்படுத்தும்!
– மகேஸ்வரன் பிரசாத் – பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வரவுசெலவுத்திட்டமே எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி முன்வைக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளுக்கான முழுமையான நிதி ஒதுக்கப்படும். அதில் எதுவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது. அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடியதான வரவுசெலவுத்திட்டமொன்றே இம்முறை முன்வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு துறைசார் வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதுவரை…
தேரரிடம் இருந்து தப்பிய 11 வயது சிறுமி
11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பெளத்த தேரர் ஒருவர் பதியத்தலாவ, மொரதெனிய பிரதேசத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேக நபரான தேரர் இந்தியாவின் தம்பதிவ புனிதத்தளத்திற்கு செல்ல பணம் சேகரிக்கும் நோக்கில் அப்பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு சென்றுள்ளார். அவ்வாறு வீடொன்றுக்கு சென்ற போது ஒரு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முயட்சித்துள்ளார். அதன்போது அவரிடம் இருந்து தப்பிய சிறுமி அறை ஒன்றுக்குள் தப்பி ஓடிச் சென்று…
புதிய திருப்பம்.. சிறுமி சேயாவை தானே கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரர் ஒத்துக் கொண்டார்
ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியை தானே கொலை செய்ததாக கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மூத்த சகோதரர் ஒத்துக்கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த மற்றும் அவரது அண்ணா ஆகிய இருவரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, கொண்டையா, நீதவானிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தின்…
புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவச கண் சிகி்ச்சை முகாம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாம் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம் பெறுகின்றது. இம்முறை 500 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் கண்ணில் வெள்ளை படலத் திரையினை அகற்றுதல் என்பன இடம் பெறுகின்றது.நாடு தழுவிய முறையில் இந்த கண் சிகிச்சை முகாம் இடம் பெறுவதாக ஜமிய்யத் சபாப் நிறுவனத்தின் உதவி…
ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர்
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நேற்றையதினம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இன்றையதினம் அந்த நாட்டின் நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதேநேரம் அவர் இன்று ஜப்பானின் நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். ஜப்பானின் நாடாளுமன்றத்தில் இதுவரையில் இரண்டு உலக நாடுகளின் தலைவர்கள் மாத்திரமே சிறப்புரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி…
இலங்கை அதிபர் சேவை தரம்-111 க்கான போட்டிப் பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை
– முஹம்மட் புஹாரி – இலங்கை அதிபர் சேவை தரம்-111 க்கான போட்டிப் பரீட்சை எதிர் வரும் 10ம் திகதி நடை பெற இருக்கின்றது.இவ் பரீசைக்கு தோற்று கின்ற ஆசிரியர்களில் அதிகமானவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளமையினால் அவ் பரீட்சையை தற்காலிகமாக இடை நிறுத்தி பிரிதொரு தினத்தில் நடாத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை இணைச் செயலாளர் ஏ.எம்.றஹீம் அவசர தந்தி ஒன்றினை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு…
“நிச்சயமாக அல்குர்ஆன் இறைவனிடமிருந்தே, வந்திருக்க வேண்டும்” – ஜெர்மன் விஞ்ஞானி!
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம். முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல்…
வத்தளையில் பௌத்த பிக்குவாக மாறிய முஸ்லிம் இளைஞன்; அதிர்ச்சிகர சம்பவம்
கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற ஒரு முஸ்லிம் மாணவன் பௌத்த பிக்குவாக மாறிய சம்பவம் ஒன்று வத்தள, என்டரமுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கொழும்பு ஸாஹிரா கல்லூரி நிர்வாகஸ்தர் ஒருவரிடம் வினவிய போது அவர் பின்வருமாறு உறுதிமொழி அளித்தார். “இம்மாணவனுக்கு சமூகத்தில் மற்றும் உலகளாவிய ரீதியில் தான் பிரபல்யம் பெற்று தனது பெயர் முழு உலகிலுமே அறிமுகமாக வேண்டும் என்ற ஒரு பேராசையும் கணவும் பாடசாலை பருவம் தொடக்கமே இருந்து வந்துள்ளது. இவரது கனவுகளை…
சதொச விற்பனை நிலையத்துக்கு அமைச்சர் றிஷாத் திடீர் விஜயம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் சதொச விற்பனை நிலையங்களில் இல்லையென்ற முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று இரவு புத்தளம் நகரில் உள்ள சதொச விற்பனை நிலையத்துக்கு திடீரென சென்று அங்குள்ள பொருட்கள் தொடர்பில் நேரில் பார்வையிட்டதுடன்,பாவணையாளர்கள் கேட்கின்ற பொருட்களை வழங்க வேண்டிய நடவடிக்கைகளை எடுககுமாறும் ஊழியர்களுக்கு பணிப்புரை வழங்கினார். சதொச விற்பனை நிலையங்களை நவீன மயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் பாவனைக்குதவாத பொருட்கள் தொடர்பில்…
திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ராஜித சேனாரத்ன,வாசுதேவ நாணயக்கார எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுகாதார கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.நாடு தழுவிய முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.கைத்தொழில்,வணிகத துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது….
