கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!
தென்னமெரிக்கா மற்றும் பல நாடுகளில், சீகா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால எச்சரிக்கை விடுத்தார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கர்ப்பிணிப் பெண்ணொருவர், சீகா வைரஸால் பாதிக்கப்படுவாராயின், அது அவருடைய வயிற்றிலுள்ள சிசுவின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும். இதனால், குறித்த சிசுவுக்கு, நரம்பியல் சம்பந்தமான…
