News
மக்காவில் காணாமல்போன இலங்கையரின் ஜனாஸா கண்டுபிடிப்பு
– இக்பால் அலி – புனித ஹஜ் யாத்திரைக்காகச் சென்று காணாமற் போனதாகப் பேசப்படும் தம்பதிகளில் கணவருடைய ஜனாஸா இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த அபூபக்கர் அப்துல் அஸீஸ் மற்றும் அவரது மனைவி ரொசான் ஹாரா அப்துல் அஸீஸ் ஆகிய இருவரும் அங்கு காணமாற் போனதாக பேசப்பட்டு வந்தது. இவர்களை தேடும் நடவடிக்கையில் ஹஜ் குழு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின்…
புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் தாயாா் வபாத்
– அஸ்ரப் ஏ சமத் – புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் அன்புத் தாயாா் ஜனாபா ஹவ்வா பாய் ஓமா் நேற்று இரவு வபாத்தானார். மர்ஹூம்களான ஜவ்பர் உமர், அலி உமர், ஹாஜி சித்தீக் உமர், மர்ஹூமா கலீமா பாய், அமீனா பாய் சுரியா ஆகியோரின் தாயாரும் ஹாஜி சுலைமான், உமர் சுரியா, இர்ஷாட் முஹமட், தன்வீர் சித்தீக் ஆகியோரின் பாட்டியும் ஆவார் இவரின் ஜனாஸா தற்போது இலக்கம் 94, ஸ்டேஸ் றோட், கிரேண்பாஸ், கொழும்பு-14 எனும் இலக்கத்தில்…
‘ஆண்மை நீக்கம்’ செய்யுங்கள் -வாசுதேவ நாணயக்கார
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவளிக்க முடியாதெனத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு ‘ஆண்மை நீக்கம்’ செய்யுமாறு ஆலோசனையொன்றையும் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆலோசனை முன்வைத்தார் வாசுதேவ நாணயக்கார.
பலாங்கொட நகர சபைக்கு சர்வதேச விருது
ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தில் ஆசிய பசுபிக் நகர நிர்மாண திட்டம் 2015 போட்டியில் ஜூரியின் விஷேட விருது பலாங்கொட நகர சபைக்கு கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஜூரிஸ் விஷேட விருதுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது. குறித்த விருது யூ.என். ஹெபிடாட் அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடியிருப்பு சங்க நன்கொடை நிதியினைப் பயன்படுத்தி பலாங்கொட நகரத்தின்…
இன்டிபென்டன் ஆர்கேட் கட்டடத்தில் உள்ள மீன்களைப் பராமரிக்க 300 இலட்சம் ரூபா தேவை
சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையிலுள்ள இன்டி பென்டன் ஆர்கேட் கட்டடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் தொட்டியில் உள்ள மீன்களை பராம ரிப்பதற்கு வருடாந்தம் 300 இலட்சம் ரூபா தேவைப் படுகின்றது. ஒரு மீன் 65 ஆயிரம் ரூபா பெறுமதியானது. குறித்த மீன்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இவ்வாறான நகர அபிவிருத்திகளையே முன்னைய அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் எமது அர சாங்கத்தில் மேல் மாகாணத்தை பாரிய நகரமாக…
உலக வங்கி, நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரவி
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெரு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரும் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த மாநாடுகளின் 188…
யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மகிந்த தரப்பு செய்தது
தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை அன்றே மஹிந்த ராஜபக் ஷ வழங்கியிருந்தால் இன்று எமக்கு எதிரான அழுத்தங்கள் வந்திருக்காது. அன்று மஹிந்த செய்த தவறுக்கு இன்று அனைவரும் விளைவை அனுபவிக்கவேண்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். வடக்கில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். இனியும் காலம் கடத்துவது பிரச்சினைகளை வளர்க்கும் செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் பிரித்தானியா…
மொபைல் தொலைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள்
ரகர் வீரர் வசீம் தாஜூடினின் செல்லிடப்பேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் செல்லிடப்பேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், செல்லிடப்பேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது. செல்லிடப் பேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை படுகொலை…
இலங்கைக்கு எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை
இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை. அனைத்து நாடுகளும் நட்பு நாடுகளாகவே இருக்கின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் தொடக்கிவைக்கப்பட்டபோது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
15ஆயிரம் தொடர்மாடி வீடுகள் நிர்மானிக்கப்படும் -சம்பிக்க
– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பினை அழகுபடுத்துதல் என்ற போர்வையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட சில திட்டங்கள் முற்று முழுதாக பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்காக பாரிய நிதி வீனடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பாரிய நிதிகள் மோசடியாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நகர அபிவிருத்தி சகல கட்டுமான திட்டங்களும் முறையான பொறியியல் திட்டமிடாமலும் தனிப்பட்டவர்களுக்கு கட்டுமான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறமாட்டாது….
ஹிலாரி கிளிண்டன் கை ஓங்குகிறது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, தொடர்ந்து 2 முறை பதவி வகித்து விட்டதால், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க அமெரிக்காவின் 67-வது வெளியுறவு மந்திரி பதவி வகித்த 67 வயது ஹிலாரி கிளிண்டன் தீவிர முனைப்பில் உள்ளார். அவருக்கு பெரும் போட்டியை…
சீனாவில் மின்மினி பூங்கா
மின்மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளது. மத்திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்மினிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளியைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பூங்கா 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பறக்கும் பகுதி, கவனிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்பெருக்கப் பகுதி, அறிவியல் விளக்கப் பகுதி என்று பிரிக்கப்பட்டு, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இங்கே பார்வையாளர்கள் தவிர, ஆராய்ச்சியாளர்களும் பெருமளவில் வருகிறார்கள். இங்கிருந்து மின்மினிகளை விலைக்கு வாங்கிக்கொண்டும்…
