Headlines

மட்டக்களப்பு பொலிஸாரின் போக்குவரத்து விழிப்புணர்வு




மட்டக்களப்பு, பாசிக்குடா வீதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதை அடுத்து  கல்குடா போக்குவரத்துப் பொலிஸார் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள்  மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வுகளை நடத்தினர்.

வீதியில் எவ்வாறு போக்குவரத்துச் செய்வது என்பது தொடர்பான பயிற்சியும் விளக்கமும் பாசிக்குடா வீதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி விளக்கம் அளித்தனர் பொலிஸார். வாரத்தில் ஒருநாள் இந்தச் செயற்பாடுகள் நடத்தப்படும் என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *