News
வால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி
நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி இருப்பதாக வேற்று கிரகவாசிகளை நம்புவோர் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்தின் பிரமிடுகள் வேற்று கிரகவாசிகளின் கண்காணிப்பில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என பலரும் நம்பி வருகின்றனர். ஆகவே, வால் நட்சத்திரத்தில் உள்ள இந்த மாபெரும் கல்சவப்பெட்டி வேற்று கிரகவாசிகளுக்கானதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது…
தீர்வில்லா நிலையில் வீதிக்கு இறங்கும் பட்டதாரிகள்
அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருமாறும், மாகாணங்களில் காணப்படுகின்ற 15000திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திய கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நாளை (18) நடைபெறவுள்ளதாக ஒன்றிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடந்த 7 மாத காலமாக தாம் பொறுப்பு கூற வேண்டிய அனைத்து தரப்பினருடனும் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கான தீர்வு…
வெக்கம் கேட்ட உலக நாடுகள்!
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொல்லப்பட்டவர்களில் 8 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் ஊடகங்களின் மூலம் எம்மால் அறியக் கிடைத்தது. இத்தாக்குதலுக்கான முழுப் பொருப்பையும் சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். ஐ.எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது உண்மையில் இத்தாக்குதலானது ஜனநாயக நாடான பிரான்ஸின் அமைதி நிலையை சீர் குழப்பவே மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக அறிய முடிகின்றது. உலகத்தையே உல்லங்கையில்…
இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக புனையப்பட்ட பொய் அம்பலமானது
பிரான்ஸில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்திற்கும், இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும். ஆயினும் அந்த வன்முறை வெறியாட்டத்தை இஸ்லாத்தோடு முடியவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் இஸ்லாமிய விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஒரு குற்றவாளி குர்ஆனை கையில் சுமந்து கொண்டு நிற்பது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு புகைபடம், அந்த புகைப்படம் இஸ்லாமிய விரோதிகளால் சமூக வலைதளங்களில் வெளியிடபட்ட சில நிமிடங்களிலேயே அந்த படம்…
நரபலி கொடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23). தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டின் குறைபாடு உள்ளவர்களுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை பெற்று உள்ளார். இவரது நண்பர் தாண்டுவாக்கே துமா (வயது 21). அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதி ஆகியோர் சேர்ந்து…
ஆஸ்திரேலியாவில் முதல் முஸ்லிம் அரசியல் கட்சி உதயம்
– அலுவலக நிருபர் – ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்று உதயமாகியுள்ளது. இந்த கட்சியின் அன்குரார்பன நிகழ்வு அண்மையில் சிட்னி நகரில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் ஸ்தாபகர் திரு.முஹம்மத் “எமது கட்சி ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரலாகவும் ஒலிக்கும், எதிர்வரும் செனட் தேர்தலில் களமிறங்க விரும்புகிறது” – எனவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் அதிக கட்சிகள் முஸ்லிம் விரோத போக்கை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரிப்பதற்கு அதிகாரிகள் இல்லை!
இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பில் கடந்த ஆட்சியில் 6,000 முறைப்பாடுகளும், தற்போதைய ஆட்சியில் 4,000 முறைப்பாடுகளும் என மொத்தமாக 10, 000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த, இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனாலேயே விசாரணைகள் தாமதமடைவதாகவும் தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாட்சிகளைத் தம்மிடம் வழங்குமாறும், சாட்சி வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பை வழங்க தாம்…
முஸ்லிம்களால்தான் இந்தியா வளர்கிறது – மோடி
அண்மையில் இங்கிலாந்தில் இந்திய பிரதமர் மோடி கூறிய ஒரு உண்மையை உரக்கக் கூறியுள்ளார். ஆம், ராஜஸ்தானில் உள்ள ஒரு முஸ்லிம் ஆசிரியரின் பெயரை கூறி, இவர் போன்றவர்களால்தான் இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆம், ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் முஹம்மது இம்ரான் என்பவர்தான் மோடியால் பாராட்டபட்ட ஆசிரியர். முஹம்மது இம்ரான் ஆசிரியர் 2012 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலும் 50 க்கும் அதிகமான மொபைல் அப்ளிகேஷன்களை கண்டுபிடித்ததோடு…
பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தா?
பாரீஸ் நகரில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை விட ஜனாதிபதி மீது அளவுகடந்த கோபமே மேலோங்கி இருப்பதாக சுவிஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சுவிஸில் வெளியாகும் SonntagsZeitung என்ற பத்திரிகை பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேவின்…
உறவை பலப்படுத்திக்கொள்ள இலங்கையும் பூட்டானும் இணக்கம்
இலங்கையும் பூட்டானும் தமக்கிடையே உறவுகளை பலப்படுத்திக்கொள்ள இணங்கியுள்ளன. இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவலக கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நிறைவுபெற்றது இதன்போது பூட்டானின் குழுவுக்கு அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் சேரிங் டொர்ஜி தலைமை தாங்கினார். இலங்கை குழுவுக்கு வெளியுறவு அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகிஸ்வரா தலைமை தாங்கினார். கலந்துரையாடல்களின்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலா, பொருளாதார ஒத்துழைப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. இதேவேளை இலங்கையில் தற்போது மருத்துவப்பட்டப்படிப்பு உட்பட்ட பல துறைகளிலும் சுமார்…
தபால் திணைக்களப் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளருடனேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி கடந்த 13ம் திகதி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இன்று இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர்…
