News
2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைத் திகதிகள் வௌியீடு!
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை முறைகள் மற்றும் திகதிகள் கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் அனைத்து தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கும் முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியுடன் முடிவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியளவில் முதல் தவணைக்காக பாடசாலை மூடப்படும். அதனையடுத்து அனைத்து சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கான…
நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க அமைச்சரவை அங்கிகாரம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், புதிய தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்குமான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காம்புடன் காணப்படும் கோழிமுட்டை!
– வத்துகாமம் நிருபர் – அவிசாவளைப் பகுதியில் உள்ள கோழி வளர்ப்பு நிலையம் ஒன்றில் கோழி ஒன்று இட்ட முட்டையில் காம்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அவிசாவளை, விலஉட துன்போவில என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவரது கோழிப் பண்ணையில் உள்ள ஒரு கோழியே இவ்வாறு காம்புடன் கொண்ட முட்டையை இட்டுள்ளது.
தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழா
– அஸ்ரப் ஏ சமத் – தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கவிதைத் தொகுதி மற்றும் குறுந்திரைப்படம் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (21) நவம்பா் 2015 காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மானும் கலந்து கொள்வாா்கள். முதல் பிரதி பெறுபவர் கவிஞா் ஜங்கரன் கதிா்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது . புத்தளம் …
இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவை கைது செய்ய ஸ்பைன் நீதிமன்றம் உத்தரவு …!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்யுமாறு, ஸ்பானிஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது! இந்தத் தகவலை எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் தெரிவிக்கவில்லை! 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காஸா நோக்கி சென்று கொண்டிருந்த Freedom Flotilla என்ற கப்பலை வழிமறித்த, இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதல் நடாத்தினார்கள். அது தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Jose de la Mata, பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட ஆறு இஸ்ரேலிய அரச…
பாரீஸில் மீண்டுமொரு தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி (Breaking news)
பாரீஸில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள தீவிரவாதிகளின் உதவியுடன் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று…
கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது அவன்ட்கார்ட்! 4 நாட்களில் 8 கோடி ரூபா வருமானம்
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினர் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரல் ரவிந்திர…
புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு தீர்மானம்
ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கான புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானம் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். நாட்டின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
புலம்பெயர்ந்தோரின் ஒத்துழைப்பு தேவை
இனவாதம், மதவாதம் உள்ளிட்ட நாட்டில் காணப்பட்ட பல தரப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் மீளவும் நாட்டிற்கு வருகை தரவேண்டும். மேலும், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் இலங்கையின் புதிய மாற்றம் நோக்கிய பயணித்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். ஜனவரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவது உள்ளிட்ட அனைத்து நல்லாட்சி வேலைத்திட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகளின்…
கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை!
நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இமேஷா வசந்த என்பருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். மேலும், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசதிபடைத்தவர்களுக்கு வரி அதிகரிப்பு! பொருட்கள் மீதான வரிகுறைப்பு
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றி மோசடி செய்வதன் ஊடாக பெரும் வரி இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் ஊடாக அவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதே…
மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளைய தினம் (19) பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது. ஐ.டி.என் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார். இதேவேளை ஐ.டி.என் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறுகின்றன….
