News
நல்லாட்சிக்கமைய செயற்படுகின்றேன்: நிமல் சிறிபால
நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி பதுளை எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது தற்போது வரையில் நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை, நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமே நடந்துள்ளது. தனிக்கட்சி…
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்குவது நல்லது
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த தீர்மானம் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று அனுராதபுரத்தில் தனது 70 ஆவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். பிறந்த நாளுக்கென்று மக்களுக்குத் தெரிவிக்க என்னிடம் எதுவும் கிடையாது. நான் எப்போதும் மக்கள் பக்கம் இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.
ரஷ்ய விமானத்தை தகர்ப்பதற்கு ISIS வைத்த வெடி குண்டு!
– கலையரசன் – எகிப்து, சினாய் பாலைவனத்தில் வீழ்ந்த ரஷ்ய விமானத்தை தகர்ப்பதற்கு, ISIS பயன்படுத்திய வெடி குண்டு இதுதானாம். இந்தத் தகவலை, ISIS இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணைய சஞ்சிகையான Dabiq வெளியிட்டுள்ளது. அவர்கள் முதலில் ஒரு மேற்கத்திய விமானத்தை தகர்ப்பதற்கு திட்டமிட்டதாகவும் பின்னர் மனம் மாறி, ரஷ்ய விமானத்தை இலக்கு வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை
புது வருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை வர்ததக, கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறைத்துள்ளார். . இதன்படி. மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனி ஒரு கிலோ 95 ரூபாகவும், கோதுமை மாவு ஒரு கிலோ 87 ரூபாகவும், டின் மீன் 140 ரூபாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும், பொதி…
அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் 13% அதிகரிப்பு!
“2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் எமது தரப்பில் 13% அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 (US Trade Show 2015) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், எனக்கு கீழ் உள்ள வர்த்தக திணைக்களத்தின் படி அமெரிக்காவுக்கான, இலங்கையின் இன்றைய வருடாந்த தேசிய…
முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ள இவ் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் பொருட்டு பாரிஸில் வசிக்கும் சகல முஸ்லிம்களையும் ஒன்றுதிரளுமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 21 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் (வீடியோ இணைப்பு)
– A.R.A.பரீல் – நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஆட்சியாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது. அதனால், நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்து பிரச்சினைகளைத் தீர்க்காதுவிடின் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுபலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட…
கல்வி அதிகாரிகள் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது – அமீரலி
– அபூ செய்னப் – கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது ஆனால் அப்படிப்பட்ட அதிகாரிகள் எமது மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறார்கள். இதனை நினைக்கும் போது மிகுந்த கவலையாக இருக்கிறது இவ்வாறான அதிகாரிகளின் மோசமான பக்கச் சார்பான நடவடிக்கைகளினால் எதிர்கால கல்விப்பரம்பரையினரான நமது மாணவ செல்வங்கள் மிகப் பிழையான முன்னுதாரணங்களை கற்றுக்கொளவார்கள் இது தொடர்பில் இனியும் பாராமுகமாக இருக்க முடியாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீரலி மிகுந்த விசனத்துடன் கவலை தெரிவித்தார். …
இலங்கை பெண்ணை கல்லெறிந்து கொல்ல நீதிமன்றம் உத்தரவு!
விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவூதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள் வழங்க தீர்ப்பளித்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை குறித்த பெண் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, குறித்த…
சோபித தேரரின் பதவிக்கு தம்பர அமில தேரர்
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும்…
