Headlines

தபால் திணைக்களப் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்




தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளருடனேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தபால் திணைக்களத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி கடந்த 13ம் திகதி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இன்று இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக சிந்தக்க பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *