News
மட்டுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டுயானை புகுந்து கைவரிசையினை மீண்டும் காட்டியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, நேற்று (16) அதிகாலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது அரிசி ஆலையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. யானைகளின் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் நாளாந்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனை அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் அச்சமின்றிய வாழ்க்கையினை தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் ஏற்றுமதி தடை நீங்கும் சாத்தியம்?
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று கடற்றொழில் அமைச்சரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய இந்த இலங்கை வந்துள்ளது. ஐரோப்பாவின் இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கொழும்பு வந்தது. நால்வரடங்கிய இந்தக் குழுவில் இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித்தொழிலை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து…
யோசித்தவின் தொலைக்காட்சி நிலையத்தில் பல மணித்தியால சோதனை
ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் (கடற்படை அதிகாரி) யோசித்தவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர். கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் இந்த தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது. இந்தநிலையில் சோதனையின்போது பல கணணிகள், மடிக்கணணி ஒன்று என்பன விசாரணைகளின் நிமித்தம் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கை கடுவெல நீதிமன்ற அனுமதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முற்பகல் 10…
மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளனர்: மஹிந்த
மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேகமாக வாழ்க்கை செலவு உயர்கின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணித்து செயற்படுவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமை, மஹேன்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில அமைச்சர்கள் கூறுவதனை…
பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி; உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக ஐரோப்பாவின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்க கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பாரிஸ் நகரம் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து ஐரோப்பாவில் மேலும் பல நகரங்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக கூடும் என்று இராணுவ உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா நோக்கி…
ஐ.எஸ். களுக்கு எதிராக மாபெரும் சைபர் தாக்குதல்: இணையப் போராளிகள் எச்சரிக்கை
பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள் மற்றும் ஹேக்கர்களின் குழு யூடியூப் வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல மூலைகளிலும் செயல்பட்டுவரும் இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் முகத்தில் ‘கய் ஃபாக்ஸ்’ முகமூடியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘உங்களுக்கு எதிரான மாபெரும்…
மகாத்மாவை படுகொலை செய்தவனுக்கு இந்தியாவில் வீரவணக்கம்!
இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று இந்து மகாசபை வீரவணக்கம் செலுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவன் கோட்சே. அவன் 1949ஆம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிடப்பட்டான். கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று நாடு முழுவதும் இந்துமகாசபை ‘வீரவணக்க’ நாளாக கடைபிடித்தது. தமிழகத்திலும் இந்து மகாசபை பெயரில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. இது…
தென்னாபிரிக்கா பயணமானார் சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தென்னாபிரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். “ஐக்கிய நாடுகள் அமைதியை கட்டியெழுப்பும் நிதியின் பொறுப்புக்கூறல்” என்ற தொனிப்பொருளில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் சந்திரிகா பண்டாரநாயக்க உரையாற்றவுள்ளார். சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையெழுப்புதலில் பெற்றுள்ள அனுபவங்கள் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இதேவேளை இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் எவ்வாறு இந்த உண்மையை கண்டறியும்…
ஐ.எஸ். தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் இடம்பெறலாம் BBS
– க.கமலநாதன் – தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார். மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது…
வெள்ள பாதிப்பு: அமைச்சர் றிஷாத் அதிகாரிகளுக்கு உத்தரவு
வவுனியா மாவட்டத்தில், வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் (16) கைத்தொழில், வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில், அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற, வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை தொடர்பான கலந்துரையாடலின்போதே…
36 இலங்கை மீனவர்கள் விடுதலை
இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்!
எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக சாலை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் தொடக்கம் இந்த வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் சாலை…
