News
மத்தல விமானநிலையத்தில் ஒருவர் கைது
– K.Kapila – இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கோடியே 60 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்
ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர் ஜெர்மனி நாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் நாடு திரும்பியும், வெளியே வரவில்லை. இது பல்வேறு யூகங்களை கிளப்பியது. ஆனால், அவர் முழுமையான நலம் பெற்று விட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர்…
மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு
– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன. 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உள்ளுர் மரக்கறிகள் 600 முதல் 700 வரை விற்பனையாகிறது. தம்புள்ள மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை…
12 மணி நேர நீர்வெட்டு
– எம்.ஆர்.எம்.வஸீம் – அத்தியாவசிய நடவடிக்கை காரணமாக நாளை 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரையான 12மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது. மொரட்டுவை மாநகர சபை பிரதேசம்,இரத்மலானை,சொய்சாபுர,பாணந்துறை, நல்லூருவ, கிரிபேரிய, கெஸல்வத்தை,ரைகம,பண்டாரகம,வெல்மில்ல,குபுக, ஹொரணை மற்றும் மொரன்துடுவ ஆகிய பிரதேசங்களும் பிலியந்தலை கெஸ்பேவ நகர சபை பிரதேசம், பொல்கஸ்ஓவிட்ட,சியபலாகொட,வேதர, றிலாவல,அம்பலன்கொட,ஹெரலியாவல,பாலகம,தியகட மற்றும் ததாயன்ன ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
சேயா செதவ்மி படுகொலை: சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதில் இன்று
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தனது பதிலை வழங்கவுள்ள நிலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதி கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பலத்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றனர். நீண்டகாலமாக நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை ஆட்சிமாற்றத்தின் பின்னர் வலியுறுத்தி வந்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஐந்து தினங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக்…
பரபரப்பான சூழ்நிலையில் ஒபாமா – புதின் திடீர் சந்திப்பு
ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புதினும் திடிரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள்…
முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல்
சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க்ம் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ்…
பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் 80000 ரசிகர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞன்
பிரான்ஸில் நடை பெற்றுள்ள குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் பிரான்ஸை மட்டும் இன்றி உலகயே உலுக்கியிருக்கிறது. மனிதாபிமானம் உள்ள அனைத்து தலைவர்களும் மனிதர்களும் இந்த கொடுஞ்செயலை கண்டித்துள்ளனர். குறிப்பாக இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதையும் இந்த செயலில் இறங்கியதாக கூறபடும் சிலர்கள் தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டியிருந்தாலும் இஸ்லாம் இது போன்ற கொடுஞ்செயலை ஏற்று கொள்ள வில்லைஎன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நிகழ்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள விளக்கங்களில் தெளிவாக விளக்கியுள்ளனர். முஸ்லிம், மனிதேயம் மிக்கவன்….
கிழக்கு முதலமைச்சரின் அநாகரிகங்களுக்கு முடிவுகட்டவுள்ளோம் – அமீர் அலி
– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த நல்லாட்சிக் காலத்தில் குறுநில மன்னர்போல் அராஜக ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கெதிராக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை கொண்டு வரத் தயாராகிறோம் என கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்ற ஆற்றலுள்ள மாணவர்களைக் கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…
அவன்ட் கார்ட் மாரிடைம் நிறுவனத்திற்கு மூடுவிழா!
அவன்ட் கார்ட் மாரிடைம் என்னும் நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் இந்த நிறுவனத்தின் அனைத்து பணிகளும் நிறுத்திக்கொள்ளப்பட உள்ளதாக அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் வர்த்தக கப்பல் பாதுகாப்பு முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் மாரிடைம் நிறுவனம் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை…
கனடாவில் பள்ளி வாயலுக்கு தீ வைப்பு
கனடாவின் தலைநகரிலுள்ள “மஸ்ஜிதுல் ஸலாம்” எனும் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிவாசலினுள் எவரும் தங்கியிருக்கவில்லை. எனினும் இந்த தீ வைப்பு சம்பவத்தினால் பள்ளிவாசல் உடமைகள் முற்றாக எரிந்து விட்டதாகவும், இதன்மூலம் பள்ளிவாசலுக்கு சுமார் 12 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர். தீ வைப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் இது “பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக” இருக்கலாம் என பள்ளிவாசல் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.
