News
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதியானது!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர்களில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அக்கட்சி பிரதிநிதிகளிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளார். எனவே, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி…
துருக்கி பெண்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும்: அதிபர் எர்டோகன் வேண்டுகோள்
துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார்….
மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்பு
உங்களுக்கு தெரியுமா? சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்றும் பரவும் தன்மை கொண்டது. ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார். இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது. சும்மாவா சொன்னார்கள் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று. ஆக மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து ‘சிரிப்பு’தான் என்பது உண்மையே. இன்று டி.வி. சேனல்கள் பலவற்றில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மக்களுக்குச்…
பல்கலை அனுமதி இணையம் ஊடாக விண்ணப்பிக்கலாம்!
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையங்கள் ஊடாக தமது விண்ணப்பத்தினை அனுப்ப முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்!
சாலாவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் அப்பிரதேச மக்களது முற்றாக சேதமடைந்த வீடுகளையும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்து கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு வழங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
வஞ்சகம் செய்தவருக்காகவும் பிரார்த்தனை செய்த மூஸா (அலை)
மூஸா (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் தொடர்ந்தது. மூஸா (அலை) சொன்னதை அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர வேறு யாரும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனெனில், ஃபிர்அவ்னும் அவனுடைய பிரமுகர்களும் அவர்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக. மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையின்படி வீட்டையே பள்ளிவாசல்களாக மாற்றி தொழுதார்கள். உலக வாழ்க்கை சுகங்களான செல்வங்களும் ஆடம்பரங்களும் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தாருக்கும் இல்லாமல் போய், வேதனைகளை சுவைத்தால்தான் அவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள்…
படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு
பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட வலயம் சிறிதானது
– மேனகா மூக்காண்டி, ஜே.ஏ.ஜோர்ஜ் – கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதனைச் சுற்றியுள்ள 500 மீற்றர் அளவிலான பிரதேசம் தடைசெய்யப்பட்ட வலயமாக காணப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
කොස්ගම හමුදා කඳවුරේ පිපිරීම සොයන්න විශේෂ හමුදා උසාවියක්
– නිලුපුලී – කොස්ගම යුද හමුදා කඳවුරේ පතොරම් ගබඩාවේ සිදුවූ පුපුරා යාම පිළිබඳව විමර්ශනය කිරීම සඳහා යුධ හමුදා මූලික පරීක්ෂණ උසාවියක් පත් කළ යුතු බව ජාතික ආරක්ෂක මණ්ඩලය විසින් තීරණය කර ඇති අතර, අදාළ සිදුවීම පිළිබඳව විමර්ශනය කිරීම සඳහා මූලික පරීක්ෂණ උසාවියක් පත් කරන ලෙසද යුද හමුදාපතිවරයාට උපදෙස් ලබාදී ඇතැයි වාර්තා වේ. මීට සමගාමීව ඉදිරියේදී…
ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட, நான் தயாரில்லை – மைத்திரி திட்டவட்டம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்காக கோட்டாபயவின் பெயரை முன்மொழிவதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறானதொரு யோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதுஇவ்வாறு இருக்க, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட தான் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. நேற்று -06- இரவு அரசாங்கத்தைப்…
அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்
அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் இன்று திறக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சலாவ இராணுவ முகாமில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து சீதாவக்க கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்
றகர் வீரரான வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…
