News
சி.ஐ.டியில் திலின கமகே ஆஜர்
அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளார். திலின கமகே, இன்றைய தினம் (07) குற்றப்புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் விடுத்த உத்தரவின் பேரில் அவர் இன்று சி.ஐ.டியில் ஆஜரானார்.
மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்ப நடவடிக்கை!
இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார். குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், முதலில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். மேலும் இது தொடர்பாக பொலிஸார் மற்றும் முப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர். குறித்த பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் பணியானது இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்று…
நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது. இது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை…
கொஸ்கம தீ: அபாய வலய எல்லை குறைப்பு
கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து முகாமைச்சுற்றி பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அபாய வலய எல்லை, ஆகக் குறைந்தது 500 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1கிலோமீற்றருக்கு அப்பால் வீடு இருந்தால் திரும்பலாம்
கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கென அறிவிப்பொன்றை இராணுவம் விடுத்துள்ளது. சலாவ இராணுவ முகாமிலிருந்து 1 கிலோமீற்றருக்கு அப்பால் வீடுகள் இருந்தால், அவ்வாறானவர்கள் மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கீழே கிடப்பதை எடுக்காதீர்கள்
கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து அங்கிருந்து வெடித்து சிதறியவற்றை எடுக்கவே வேண்டாம் என்று இராணுவம் அறிவித்துள்ளது. சலாவ இராணுவ முகாமிலிருந்து 1 கிலோமீற்றருக்கு அப்பால் வீடுகள் இருந்தால், அவ்வானவர்கள் மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெடிக்காத வெடிபொருட்களும் கீழே கிடக்கலாம் என்பதனால், அவ்வாறானவற்றை எடுக்காது 0113818609 என்ற தொலைபேசி இலக்கத்து அறிவிக்குமாறும் இராணுவம் அறிவித்துள்ளது.
பாதுக்க – அவிசாவளைக்கு விசேட ரயில் சேவை
கொழும்பு – அவிசாவளை வீதி மூடப்பட்டுள்ளமையால் பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வீதி மூடப்பட்டுள்ளது
கொஸ்கம தீ விபத்தில் காயமடைந்தோர் தொகை அதிகரிப்பு
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில், நேற்று இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால கூறினார்.
முகநூல் (Facebook) தொடர்பில் 925 முறைப்பாடுகள்!
கடந்த ஐந்து மாதங்களில் முகநூல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தை பிழையாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 925 முறைப்பாடுகளில் சுமார் 95 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
கொஸ்கம கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம்
வெடிப்பு ஏற்பட்ட அவிசாவளை – கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் சுற்றி உள்ள பகுதிகளை பார்வையிடுவதற்காக வருவதைத் தவிர்த்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. தற்போது பிரதேசவாசிகள் அதனை பார்வையிடுவதற்கு வருவதால் கடும் வாகன நெரிசலுடன் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த இந்த தீ பரவலின் பின்னர் அந்த பிரதேசத்தை சுற்றிவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கலவரமான நிலையுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 என்ற ஹெலிகொப்டர்…
25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டை குடியுரிமை வழங்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாவை சேர்ந்த…
