News
ஐரோப்பாவில் இலங்கை மீன்களுக்கு கிராக்கி – திணறுகிறது இலங்கை
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், இந்த தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன….
චමල් රාජපක්ෂට සම සභාපති ධූරය අහිමි වෙයි
– නිලුපුලී- හම්බන්තොට දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සම සභාපති ධුරය දැරූ හිටපු කතානායක හා හම්බන්තොට දිස්ත්රික් සන්ධාන මන්ත්රි චමල් රාජපක්ෂ මහතා එම තනතුරෙන් ඉවත් කොට ඒ වෙනුවට ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන ඇමැති මහින්ද අමරවීර මහතා පත්කොට ඇති බව තමන්ට ජනාධිපති ලේකම් කාර්යාලයෙන් ලිඛිතව දැනුම් දී ඇති බව හම්බන්තොට දිස්ත්රික් ලේකම් ඩබ්ලිව්. එච්. කරුණාරත්න මහතා පවසා ඇත….
සිංගප්පූරු සංචාරයෙන් පසු අගමැති අද යළි දිවයිනට
– නිලුපුලී – සිය තෙදින සිංගප්පූරු නිල සංචාරය නිමවූ අග්රාමාත්ය රනිල් වික්රමසිංහ මහතා ඇතුළු දූත පිරිස අද එනම් (ජූලි 20 දා) අළුයම නැවතත් දිවයිනට පැමිණියේය. සිංගප්පූරු අග්රාමාත්යවරයා සහ ජනපතිවරයා හමුවූ අගමැති රනිල් වික්රමසිංහ මහතා එහිදී දෙරටට වැදගත් කරුණු කිහිපයක් පිළිබඳව සාකච්ඡා කළ අතර ගිවිසුම් හයකටද අත්සන් තැබිය. මහාචාර්යය මෛත්රී වික්රමසිංහ සහ අමාත්යවරුන් වන මංගල සමරවීර, මලික්…
ஆகஸ்ட் முதல் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.
இலங்கை புதிய பாதையில் இணைந்துள்ளது: சிங்கப்பூர் ஜனாதிபதி
‘இலங்கை அரசாங்கமானது, மிகமுக்கியமான செயற்பாடுகள் பலவற்றை முன்வைத்து, புதிய பயணத்தில் இணைந்துள்ளது’ என்று சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமே தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவைத்துள்ள புதிய பயணத்தில், பொருளாதார மற்றும் கைத்தொழில் துறைகளில் பாரிய அபிவிருத்திகள்…
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று கொழும்பில்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று (18) மாலை கொழும்பில் ஒன்று கூட உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ள விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மாநாடுகள் குறித்து இதில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது.
கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!
கோழி இறைச்சிக்காக புதிய நிர்ணய விலையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய 380 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 410 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை ,அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு கோழி இறைச்சியினைப் பெறமுடியாது என மலையத்தில் ஹட்டன்,மஸ்கெலிய,பொகவந்தலாவ பிரதேச கோழிக்கடை வர்த்தகர்கள் நேற்றைய தினம் (18) கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்
துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும்…
100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு
கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாத 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி. அரந்தர கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். கொழும்பு,…
துருக்கி இராணுவ புரட்சி தோல்வி! இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வி
துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும். சிதைவடைந்த…
மாயமான லசந்த விக்ரமதுங்கவின் குறிப்பு புத்தகம்!
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்திய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரகசிய தகவல்கள் அடங்கிய இந்த விசேட குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்புப் புத்தகம் காணாமல் போன சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்மை கொலை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மற்றும்…
மஹிந்தவுக்கு மேர்வின் சில்வா விதிக்கும் நிபந்தனை!
தவறு செய்த சகோதரர்களை கைவிடுவதாயின் தான் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை ராஜபக்ச குடும்பத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்ட அவர், களனியில் பிரச்சினைகளை தோற்றுவித்தது பசில் ராஜபக்ச எனவும் சுட்டிக்காட்டினார். இன்னும் பல விடையங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்த மேர்வின் சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தொடர்பில் தான்…
