News
வீதிகளில் பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு, பாதுகாப்பு பணியில் துருக்கிய பெற்றோர்கள்
துருக்கி இராணுவ சதி புரட்சியினை துருக்கி மக்கள் தோல்வியடைய செய்த பின் நகரங்களின் பாதுகாப்புக்காக துருக்கிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களில் தூங்க வைத்து கொண்டு நகரின் பாதுகாப்பு கடமையில் கண்காணிப்புடன் இருந்தனர்.
பொலிஸ் சீருடையில் மாற்றம்!
பொலிஸ் சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பொலிஸ் சீருடையின் நிறத்தை மாற்றிய அமைப்பதா இல்லையா என்பது குறித்து பொலிஸ் தலைமையகம் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை கோரி வருகின்றது. புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இது குறித்து கருத்து கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது பொலிஸார் பயன்படுத்தும் சீருடையானது நூறு வருடம் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நீளக் காற்சட்டையும்…
கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டுள்ள 495 ரூபாவிற்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோழி பண்ணை உரிமையாளர்களின் வரி நீக்கப்பட்டு, அவர்களுக்கான சலுகைகள் செய்து தரப்படுமாயின் குறித்த…
இலங்கை மருத்துவருக்கு பிரிட்டனின் உயர்விருது
இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரமுகர்களுடனான சந்திப்பு
-சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை அடிநாதமாகக்கொண்டு பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் “அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்” செயற்பாடுகளுக்கு தாம் உறுதுணை அளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் கல்வி மாநாட்டின் முக்கியஸ்தர்களான அதன் தலைவர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில், செயலாளர் சட்டத்தரணி ரஷீட்எம்.இம்தியாஸ், உபதலைவரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான என்.எம்.அமீன் உட்பட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்துக்…
உதயங்கவுக்கான பிடியாணையை நிராகரித்தது நீதிமன்றம்
ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கட்ட சர்வதேச பிடியாணை உத்தரவை நிராகரித்துள்ளதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யுமாறு…
யாழ். பல்கலைக்கு பூட்டு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்துப் பீடங்களும், தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார். மறுஅறிவித்தல் வரும் வரையில், அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இலங்கையர்களின் ஆதரவு, துருக்கிக்கு – ரணில்
– எம்.ஆர்.எம்.வஸீம் – துருக்கியில் ஜனநாயக ஆட்சியை பாதுகாத்துக்கொள்வதற்கு துருக்கி ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அந்த நாட்டு அரசாங்கத்துக்கு முடியுமாகியது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துருக்கியில் இராணுவ புரட்சியொன்றின் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொது மக்கள் ஒன்று திரண்டு இராணுவத்தின் புரட்சிக்கு எதிராக செயற்பட்டு இராணுவ தாங்கிகளை மறித்தும் கற்களை வீசித்தாக்கியும் உள்ளனர். இதனால் இராணுவத்தினர் தங்கள் புரட்சியை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது…
வாயில் கலிமாவுடன், உயிரைநீத்த மத்ரஸா மாணவர் – அக்குறணையில் சம்பவம் (படங்கள்)
Ash-Sheikh TM Mufaris Rashadi- நேற்று முன்தினம் (16) வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர் சகோ உமர் பின் அமீன் அவர்களின் ஜனாஸா தொழுகையின் போது அலை மோதிய மனித வெள்ளமே இது. நல்லவர்களின் மரணம் கூட பிறரை நல்லவர்களாக்கத் தூண்டுகிறது. அவர்கள் மரணிப்பதில்லை, வாழ ஆரம்பிக்கிறார்கள்… நேற்றைய எனது பயணத்தில் அக்குரணையை எட்டிப் பார்த்து பள்ளியில் இஜ்திமாவா ? என்றேன்.. இல்லை. ஷேக் அவரது ஜனாஸாவிற்கு…
நாமலின் பதிலடி!
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் கணக்கில் கருத்துப் பதிவேற்றம் செய்துள்ளார். இதில், “எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி, நான் என்றும் எப்போதும் உங்களுடன் இருப்பேன், அரசாங்கத்தின் நீதி அமைப்பில் என்னை கேலி செய்வது போல் தோன்றினாலும், நான் குற்றமற்றவன் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவரும்” என பதிவேற்றியுள்ளார். இதேவேளை நாமலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் (17) தங்காலையில் ஆர்ப்பாட்டம்…
பஷில் கைது!
வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று (18) முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி கட்டணங்களில் வற் வரி சேர்க்கப்படாது!
தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்….
