News
லசந்த கொலை ; முன்னாள் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விசாரணை
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரசன்ன நாணயகார மற்றும் சந்திர வகிஷ்ட ஆகியோரிடம் இன்று (20) காலை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. லசந்த கொலை விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில்…
அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்!
றக்பி வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவரையும், மீளவும் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
வற்வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களுக்கான வற்வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (19) பிலியந்தல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கெஸ்பெவ, பிலியந்தல, பொகுந்தர பிரதேச வர்த்தகர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வற்வரி அதிகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
சகல கல்வி நிறுவனங்களும் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையங்களாக மாற்றமடைய வேண்டும்
இந்நாட்டு பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட சகல கல்வி நிறுவனங்களும் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையங்களாக மாற்றமடைதல் வேண்டுமெனவும் பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் நல்லிணக்கம் எனும் பாடம் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் இதனையிட்டு கவலையடைவதாகவும் அவ்வாறான மோதல்கள் ஏற்படாதவாறு எமது சகல கல்வி நிலையங்களையும் மீண்டும் சீர்செய்யவேண்டுமெனவும் குறிப்பிட்டார். சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியில்…
‘சஹசர’ முன்னோடிக் கருத்திட்டத்தின் ஆரம்ப வைபவம்!
போக்குவரத்துச் சேவையினை பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதும் திருப்தியளிக்க கூடியதுமான ஒரு சேவையாக மாற்றியமைத்தலானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். கண்டியின் குண்டசாலையில் நேற்று முந்தினம்(18) பிற்பகல் இடம்பெற்ற பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவை அறிமுகப்படுத்தும் ‘சஹசர’ முன்னோடிக் கருத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டுக்கு இன்றியமையாத ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் போது ஒருசிலர் அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும் அதனைக் குழப்புகின்ற விதமாகவும் அவற்றுக்கு முட்டுக்கட்டையாக செயற்படுகின்ற போதும்…
யாழ். பல்கலை விடயம் தொடர்பில் அமைச்சர் குழு ஆராய்வு
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விடயங்களை அறிவதற்கும் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்கும் நோக்கிலும் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நேற்று (19) விஜயம் மேற்கொண்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ண பரணவிதான ஆகியோரே இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டு பல்கலைகழக நிர்வாகத்தினர் மாணவ பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். யாழ் பல்கலை கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்…
காணாமல் போனோர் அலுவலகம் எதற்காக? மஹிந்த கேள்வி
காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினருக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு மத்தியில் அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் எனும் பெயரில் நிறுவனம் ஒன்றை அமைக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்….
அரச அச்சக மோசடி குறித்து உரிய நடவடிக்கை இல்லை!
அரச அச்சுத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தினால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அச் சங்கத்தின் செயலாளர் சரத் லால்பெரேராவால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் முன்னாள் மேலதிக அச்சகர் இணைந்து பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு, திணைக்களத்தில் உரிய நிர்வாகம்…
சமல் ராஜபக்ஷ அவுட்: மஹிந்தவுக்கு வாய்ப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷவே நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இவ்வாண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கடந்த இரண்டு கூட்டங்களிலுமே, சமல் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை. ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்தை அவர், ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே, அப்பதவிக்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு…
புதிய கெசினோவுக்கு இலங்கையில் இடமில்லை – பிரதமர்
கெசினோ சூதாட்டக்காரர்களுக்கு இலங்கையில் இடமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சிங்கபூர் வர்த்தகர்களை சிங்கப்பூரின் நெங்சிலா ஹோட்டலில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சந்திப்பின் போது வர்த்தகர் ஒருவர் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கெசினோ சூதாட்ட வர்த்தகர்களுக்கு இந்த ஆட்சியில்அனுமதி கிடைக்குமா? என பிரதமரிடம் கேட்டபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு கெசினோ வியாபாரத்தை ஆரம்பிப்பது நல்லாட்சியின் கொள்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்….
சீனி, உப்பு, ‘சீஸ்’ வரிகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் ராஜித
தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக சீனி, உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இனிப்பு பானங்களின் வகைகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி உணவிலுள்ள சீனியின் அளவை மக்கள் அறிந்து கொள்வதற்காக வர்ண அடையாளங்கள் அதில் குறிப்பிடப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 10 கிராமிலும் கூடுதல் சீனி பயன்படுத்தப்படுமாயின் சிவப்பு…
