News
குற்றம் செய்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவர் – பூஜித் ஜெயசுந்தர
நல்லாட்சியின் கீழ் குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் பொலிஸ்துறை பக்கசார்ப்பாக நடப்பதற்கு ஏதுக்கள் இல்லை.எனவே, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில்ஆஜர்செய்யப்படுவார்கள். பொலிஸ்துறை தற்போது வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக குற்றம் செய்யும்வழிமுறைகள் தடுக்கப்படும். ஊழல் செய்தவர்கள் சிறைகளுக்கு நிச்சயம் செல்வார்கள். சட்டத்தின்படி அனைத்தும்முன்னெடுக்கப்படும். மற்றவர்களின் அட்டவணைப்படி வெள்ளைவேன், கறுப்பு வேன்…
கென்யாவில் அமைச்சர் றிஷாத்
ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை அதிகபட்சஆதரவை வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதி அளித்துள்ளார். நேற்று (17) காலை நைரோபியா கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை உலக நிகழ்வாக நடைபெறும் ஜி -77 மற்றும் சீனா மாநாட்டின் அமர்வின் 14 ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில்உத்தியோகபூர்வமாக இலங்கை அரசின் சார்பாக கலந்துக்கொண்டு இலங்கையின் அறிக்கையினை தாக்கல்செய்து உரையாற்றுகையிலேயே அமைச்சர்…
உயர்நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது – மரிக்கார்
கடந்த ஆட்சியின் பொன்சேகாவை சிறைக்கு இழுத்துக்கொண்டு சென்றது போல நாமல் சிறைக்கு இழுத்துக்கொண்டு செல்லபடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொத்தடுவையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாளில் இலங்கையின் உயர்நீதிமன்றில் இரண்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு தீர்ப்பு சரி என்றும்,மற்றைய தீர்ப்பு பிழைஎன்றும் கூட்டு எதிர்கட்சி கும்பல்கள் கோசமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்தவின் ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டு எரிபொருள்…
நாமல் சற்றுமுன்னர் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்ர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக அறிவிக்கபடுகிறது. நிதி மோசடி தொடர்பில் கடந்த 11ஆம் திகதி, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் ஆஜராகி வாக்குமூலமளித்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு இன்று 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யபட்டார்.
அல்லாஹ் உங்களுடன், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் – எர்துகானுக்கு கர்ளாவி கடிதம்
-Ifthihar Islahi Azhary MA- சேஹ் கர்ளாவி அவர்கள் தலைவர் உருதுகான் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் بعث الدكتور يوسف القرضاوي ، رئيس الاتحاد العالمي لعلماء المسلمين، برسالة للرئيس التركي رجب طيب أردوغان ، بعد فشل «الانقلاب العسكري» على الأخير. أوقال «القرضاوي» في صفحته على «فيس بوك»: «بعثت برسالة للرئيس رجب طيب أردوغان،…
என்னைவிட எனது மகனுக்கு, கூடுதல் தகுதி உள்ளது – ஜாகிர் நாயிக்
டாக்டர் ஜாகிர் நாயிக் அவர்களது மகன், ஃபாரிக் நாயிக் தந்தைக்கு எவ்விதத்திலும் குறையாத மார்க்க அறிவும் மனனமிடும் திறனும் கொண்டவர். அல் ஹம்துலில்லாஹ் ” எனக்கு ஆங்கிலமும் உருதும் மட்டும் தான் தெரியும்; எனது மகனுக்கோ கூடுதலாக அரபியும் தெரியும்..! குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளது, அவருடைய கூடுதல் தகுதி” -டாக்டர் ஜாகிர் நாயிக்..!!
கண்ணீர் விட்டழுத எர்தூகான் (படங்கள்)
இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக போராடி, நாட்டின் நல்லாட்சிக்காக உயிர்நீத்தவர்களின் ஜனாஸாவில் கலந்துகொண்டு அவர்களுக்காக கண்ணீர்விட்டழும் மக்கள் தலைவன் – ரஜப் தைய்யிப் அர்தூகான்
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதியை முறியடித்த துருக்கி மக்கள்!
துருக்கி நாட்டில் திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் 170 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தினரை பல அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த இராணுவப் புரட்சியை முறியடித்து விட்டதாக அரசுத் தரப்பு கூறினாலும் பல்வேறு பகுதிகளில் பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட…
நாமல் நீதிமன்றத்தில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் (18) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இனவாதம் புதிதாய் தோன்றியுள்ளது!
உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக தோன்றி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவம் மீண்டும் ஓர் இரத்தக்கரை தோன்றா வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார். அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து இதை தடுக்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கரமான இனவாதமாக மாறும்…
துருக்கியும் கிறுக்கனும் (Poem)
-முகம்மட் நிரோஸ் – தெருக்களில் இறங்கி திரண்ட மக்கள் துருக்கியை மீட்டதன் துணிச்சலைப் புகழ்ந்து முறுக்கிறார் மீசையை முக நூலில் பலபேர் கிறுக்கர்கர்கள் சில பேர் கிண்டலும் செய்கிறார் பொறுக்குது இல்லையே போஸ்ட்களைக் கண்டால். திருக்குர் ஆனை திரும்பியும் பாராரும் சிர்க்கை பித் அத்தை செய்யும் மனிதரும் பர்ளான தொழுகையை பாழாக்குவோரும் இருக்கிற நாட்டுக்கு எதுவும் செய்யாரும் துருக்கி நாட்டுக்காய் துடிப்பதில் பயன் என்ன? புரட்சி வெல்லனும் புது ஆட்சி வரனும் பிரச்சினை தோன்றனும் பிறகு தங்களின்…
பிரதமர் சிங்கபூரிற்கு சென்றார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469 விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தையில் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
