Main News
தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கையை ஒன்றிணைக்க பரிந்துரைக்கிறோம்! – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்
ஊடகப்பிரிவு – ‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது‘ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்–லாய் மார்கு க்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இச்சந்திப்பில்…
நிந்தவூரில், வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு
நிந்தவூரில் சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கான 500 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களது சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 08.07.2018 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் அரசியடி வட்டாரத்தில் இடம் பெற்றது. கடந்த தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்த…
மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபையின் குழுக்களின் தலைவர் எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவிப்பு!!!
மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவித்தார். கற்பிட்டி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (10) சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் விஷேட உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆஷிக், அதுதொடர்பில் மகஜர் ஒன்றையும் சபையின் தலைவரிடம் கையளித்தார். இதன்போது உரையாற்றிய அவர்…
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பிரதியமைச்சர் அமீர் அலி மூலம் வாழ்வாதாரப்பொருட்கள் வழங்கிவைப்பு….
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்….
முஸ்லிம் தலைமைகளின் இருப்புக்கான ஜனநாயகச் சமர்!!!
முஸ்லிம் சமூகத்தில் நிரந்தரமாக நிலைப்பட வேண்டுமென்ற ஆதங்கம் முஸ்லிம் காங்கிரஸையும், மக்கள் காங்கிரஸையும் நேரிடை, எதிரிடை மோதல்கள், முறுகல்களுக்கு தயார்படுத்தியுள்ளன. இதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பக்கத் துணையாகப் பல கட்சிகளும், உள்ளூர்த் தலைவர்களும் துணையாக நிற்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்நிலையால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தேசிய ரீதியில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளனர் சிலர். எனினும் சிங்களத் தேசியமும், தமிழ்ப் பெரும்பான்மையுமே மக்கள் காங்கிரஸின் அரசியல் போக்கையும், நோக்கையும் சந்தேகிக்கின்றனர். ஆனால் மக்கள்…
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் ஏன் இணைந்து கொண்டேன்? முனாஜித் மௌலவி விளக்கம்
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தொடர்ச்சியான முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணிக்கு, அவரது பகீரத முயற்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், தனது அமைச்சுக்கு பெற்றுக்கொள்ள மேற்கொண்டுவரும் முயற்சிகள் நீதமானதல்ல என்ற காரணத்தின் அடிப்படையில், பிரதியமைச்சருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால், அவரை விட்டு வெளியேற தான் நேர்ந்தது என்று மௌலவி முனாஜித் (சீலானி) தெரிவித்தார். பிரதியமைச்சர் மஸ்தானின் ஆலோசகராகவும், அவரது அரசியல் பயணத்தில் தோள் கொடுத்தவருமான மௌலவி முனாஜித், அகில இலங்கை…
தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி
டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்; நேற்று (10.07.2018) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதேஅமைச்சர் இதனை தெரிவித்தார். கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் மற்றும் சீன…
பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே.முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இன்று மாலை (10) இணைந்து கொண்டார். இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்தார். அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து மக்கள் பணிகளுக்காக தன்னை தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன் எனவும் பல்வேறு சவால்களுக்கும் சதிகளுக்கும் மத்தியில்…
தல்கஸ்பிடிய மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் வட்டார கிளை அமைக்கும் கூட்டமும்..
தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கெளரவ அல்ஹஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தூர நோக்குச் சிந்தனையில் ரிதீகம பிரதேச சபை தல்கஸ்பிடிய பிரதேச மக்கள் சந்திப்பும் பிரதேச அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடு மற்றும் வட்டார கிளை அமைக்கும் கூட்டம் நேற்று (06) ரிதீகம பிரதேசசபை வேட்பாளர் அஸாட் நஸீரின் ஏற்ப்பாட்டில் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குளியாப்பிடிய மக்கள்…
4 மில்லியன் ரூபாய் நிதயொதுக்கீட்டில் பொல்கஹவெல தொகுதிக்கு சுயதொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்..
குருநாகல் பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் மடலகம தேர்தல் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வும் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துறையாடலும் நேற்று (08) முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீனின் ஏற்ப்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி . இர்பான் ,…
சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.
ஊடகப்பிரிவு. அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அகில…
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட அமைச்சர் ரிஷாடினால் நியமனம்
-ஊடாப்பிரிவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை கையளித்தார். புதிய தலைவராக பதவியேற்றுள்ள அனுர மத்தேகொட சட்டத்துறையில் 37 வருடகால அனுபவம் கொண்டவர். சுமார் 20 வருட காலம் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச தரப்பு சட்டத்தரணியாக பணியாற்றிய அவர் நெதர்லாந்து ஹேக்கில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International…
