Main News
பிழையான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார் பைசல் காசிம்; புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஹ்ஸி குற்றச்சாட்டு.
சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் புத்தளம் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையானது மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாடு என்று புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ் .ஆர் .எம்.முஹ்ஸி தெரிவித்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின் உறுப்பினர் எனும் வகையிலும் , புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவன் என்ற வகையிலும் இந்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடரபாக உண்மை நிலையை தெரியபடுத்த வேண்டியது எனது கடமையாகும். புத்தளம் வைத்திய சாலையில் 1200 படுக்கைகள் கொண்ட 6 மாடி கட்டிடம் அமைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…
கோலாலம்பூர் விசேட நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் றிஷாட் மலேசியா பயணம்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று (25) அதிகாலை மலேசியா கோலாலம்பூர் பயணமானார். இன்று காலை கோலாலம்பூரில் மலேசிய இஸ்லாம் சே கட்சியின் தலைவர் டட்டோ சிறீ துவான் குரு ஹாஜி அப்துல் ஹாதி பின் அவாங் தலைமையில் கோலாலம்பூர் ஜலான் ரஜா லோட் இல் ஆரம்பமாகும் உயர்மட்ட மாநாடு ஒன்றில் அமைச்சர் அதிதியாக கலந்துகொள்கின்றார். அதன் பின்னர் கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும் Global Leadership Award 2018 நிகழ்விலும் அமைச்சர் அதிதியாகப்…
அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள் உரிமை கோறுவதை தடைசெய்வதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள் உரிமை கோறுவதை தடைசெய்வதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமைகளான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற போதே மேற்படி தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டமாவடி பிரசே சபை பிரிவில் சட்ட விரோதமான…
அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலரை அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலரை அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கண்ணகிபுரம் பொதுக் கட்டடத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு…
மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு யாழில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
யாழ்நகரில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் இன நல்லுறவுக்கு பங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாண முஸ்லிம்களை நேற்று முன்தினம் (22.07.2018) ஒஸ்மானியா கல்லூரியில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். இலங்கையிலே முன்னர் புகழ் பெற்று விளங்கிய யாழ் முஸ்லிம் குடியிருப்பு பகுதியான சோனகத்தெருவில் வாழ்ந்தவர்கள் வர்த்தகத் துறையில் மாத்திரமன்றி, கல்வித்துறையிலும் பிரகாசித்தவர்கள். சுமார் 3 தசாப்த காலத்துக்கு…
மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் தலைமையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு…..
மன்னார் பிரதேசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 5ம் தர மாணவர்கள் எழுத இருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையான சித்திகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்கள் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் இன்று இலவச கருத்தரங்கை நடத்தியுள்ளார்.. இந்த இலவச கருத்தரங்கில் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் 450 மாணவர்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தவிசாளர் எதிர்வரும் காலங்களில் இந்தப்பிரதேசத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியுடன்…
பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அச்சாணியான கைத்தொழில் சமூகத்தை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு யாழ் நகரில் அமைச்சர் ரிஷாட்
நாட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…
வடக்கில் இருபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு
ஊடகப்பிரிவு யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கிலே ஆகக்குறைந்தது 20000 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடியவாறு கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களையும் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம் பெற்ற…
கிளிநொச்சியில் தானியக்களஞ்சியசாலை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பு.
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகளின் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை மக்களின் பாவனைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (21) ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் சுயதொழில் மேற்கொள்வோருக்கான புதிய கடன் திட்டம் அறிமுகம்
நிதியமைச்சின் கருத்திட்டத்தில் உருவான ‘என்டப்பிரைஸ் சிறீலங்கா’ எனும் திட்டத்தின் அடிப்படையில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் நடைமுறையின் அங்குரார்ப்பண நிகழ்வு நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரினால் இன்று (21) முல்லைத்தீவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-
அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் மன்னாரில் அமைச்சர் றிஷாட்
ஊடகப்பிரிவு வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் (20) அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான்,…
மன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது? அமைச்சர் சம்பிக்க மன்னாரில் விளக்கம்
ஊடகப்பிரிவு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவினால் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் கொண்டே மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். றிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கிணங்க வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் ஒதுக்கியமைக்கும் அமைச்சருக்கு தனது நன்றிகளை…
